மட்டக்களப்பில் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளைப் பிரசவித்துள்ளதாகவும், தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக இன்று (22) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாறஞ்ஜினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (22) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஏப்பிரல் மாதம் 5ம் திகதி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சோ்ந்த 25 வயதுடைய ஹரிகரன் கிருஷ்ணவேணி என்பவர், வெளிநாட்டில் இருக்கும் போதே கருத்தரித்துள்ளார்.
அதனால் 8 வாரங்களில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதாகவும், மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவில் கிளினிக்கிற்காக வந்த இவரை, கதிர்வீச்சு மூலம் சோதனை செய்த போது இவர் 4 குழந்தைகள் கருத்தரித்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.
குறித்த தாய் ஏற்கனவே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து, குறித்த குழந்தை இறந்து ஐந்து வருடங்களின் பின்னர், மீண்டும் இயற்கையாகவே கருத்தரித்துள்ளார்.
பின்னர் வைத்தியர்கள் குறித்த தாயை மிக நெருக்கமான கண்காணிப்பில் வைத்து, பராமரித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் 32 வாரமும் 5 நாட்களும் ஆன நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவ்வறே ஏப்பிரல் 5ம் திகதி 4 குழந்தைகளையும அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் 3 பெண் குழந்தைகள் உட்பட 4 குழந்தைகளை இந்த ஹரிகரன் என்ற தாய் பெற்றெடுத்துள்ளார்.
மகப்பேற்று வைத்திய நிபுணர் எம்.சரவணன், தலைமையிலான வைத்திய குழாத்தினர் குறித்த பிரசவத்தினை மேற்கொள்வதற்கான, சகல ஆலோசனை மற்றும வழிகாட்டல்களையும் வழங்கி, செயற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் கலாறஞ்ஜினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
குழந்தைகள் தற்போது ஒரு மாதம் 17 நாட்களைக் கடந்து ஆரோக்கியமாக இருப்பதாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..