சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y200 புரோ 5ஜி அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது இந்தியாவில் விவோ Y200 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘ஒய்’ வரிசையில் இந்த போன் வெளிவந்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட்
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி ஸ்டோரேஜ்
- பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 65 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- 44 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இதன் விலை ரூ.24,999 என அறிவிக்கப்பட்டுள்ளது
- குறிப்பிட்ட வங்கிகளில் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விலையில் அறிமுக சலுகையும் பெறலாம்
Immerse yourself in the ultimate elegance with the mesmerizing Silk Style Glass Design of the #vivoY200Pro #5G. #ItsMyStyle pic.twitter.com/tcLX0FPgJ1
— vivo India (@Vivo_India) May 20, 2024