ஆடி இந்தியா நிறுவனம் Q7 எஸ்யூவி காரில் சிறப்பு போல்ட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது இந்த மாடலானது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் ஏற்கனவே இதே போல்ட் எடிசன் Q3, Q3 Sportback மாடல் ஆனது விற்பனைக்கு வெளியானது. தற்பொழுது வந்துள்ள மாடல் ஆனது வெளிப்புற ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் சிறிய அளவிலான இன்டீரியர் மாற்றங்களை மட்டுமே பெற்று இருக்கின்றது. மற்றபடி மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த ஒரு மாற்றங்களும் இடம் பெறவில்லை.
3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 340 எச்பி பவர் மற்றும் 500Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது பெற்று ஏழு விதமான டிரைவிங் மோடுகளை (Auto, Comfort, Dynamic, Efficiency, Off-Road, All-Road and Individual) கொண்டிருக்கின்றது .
அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோ மீட்டராக உள்ள இந்த மாடலுக்கு Quattro ஆல்வீல் டிரைவ் ஆப்சனை பெற்றுள்ளது மேலும் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுவதற்கு வெறும் 5.6 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
ஆடி Q7 போல்ட் எடிசனில் கருப்பு நிற ஸ்டைலிங் பேக்கேஜுகள் மற்றும் பல்வேறு இடங்களில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 7 இருக்கைகளைக் கொண்டுள்ள இந்த மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்கு உடன் 19 அங்குள்ள 5 ஸ்போக் அலாய் வீல் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இன்டிரியரில் வழக்கமான மாடலை போலவே அமைந்திருக்கின்றது 10.00 அங்குள்ள டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது கொடுக்கப்பட்டிருக்கின்றது ஆப்பிள் கார்ப்ளே ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சங்களுடன் 360 டிகிரி கேமரா மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கின்றது.