அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை முன் வைப்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பம் வரலாற்று வெற்றி என்றும், 76 ஆவது சுதந்திர இலங்கையின் நாணயம் தொடர்பாக அரசாங்கம் மிகவும் முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாகவும், நிதி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்;
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள் இரண்டு தசாப்தங்களாக இலங்கைக்கு விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக இதனை அடையாளப்படுத்தலாம் என அவர் குறிப்பிட்டார்.
திறைசேரி செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் இந்த சட்டமூலத்தின் ஊடாக தெளிவாக வரைவிலக்கணப் படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பிரதான கணக்கு அதிகாரியாக திறைசேரி செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் சரியாக வரையறுக்கப்படாமை பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் கட்டிக்காட்டினார்.
அது தவிர சொத்துக்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமையை மக்களுக்கு வழங்குதல் போன்றவற்றின் ஊடாகவும் அரச நிதி முகாமைத்துவம் தொடர்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய விபரித்தார்.
எதிர்க்கட்சி விடுத்த கோரிக்கைக்கு இணங்க நாட்டின் பல்வேறு நிதி முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கு வேறு அரசாங்கம் ஒன்றை நியமிக்கும் அவசியம் இல்லை என்று வலியுறுத்திய இராஜாங்க அமைச்சர், பொறுப்புள்ள அரசாங்கமாக அதனை நிறைவேற்றும் பொறுப்பு இச் சட்ட மூலம் ஊடாக உறுதிப்படுத்தப்படுவதாகவும் சுட்டிக் காட்டினார்.
நேற்று (22) பாராளுமன்றத்தில் இடம பெற்ற பாராளுமன்றத்தை ஒத்திப் போடுவதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய மேற்கண்டவாறு தெளிவு படுத்தினார்.
இதனிடையே சீனி வரி ஊழல் காரணமாக இழக்கப்பட்ட 500 மில்லியன் ரூபா வரையான இலாபத்தை வரியாக பெற்றுக்கொள்வதற்கு தற்போது முடிந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
சீனி வரி ஊழல் ஊடாக அரசுக்கு சொந்தமானது 17 மில்லியன் வரையான இலாபம் கிடைக்காது போனது என்று உறுதிப்படுத்தியதுடன், சீனி இறக்குமதி கம்பெனிகளில் வரி வருமானம் ஊடாகப் போன அந்த நிதியிலிருந்து ஒரு பகுதியை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஆய்வறிக்கையொன்றை விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.