இவ்வருட தியவன்னா வெசாக் வலயம் 2024, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பினால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகிவற்றின் பங்களிப்புடன் வெசாக் விளக்குகளை ஏற்றும் நிகழ்வு நாளை மாலை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் திரு.சுதர்ஷன குணவர்தன ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் மிகவும் சிறப்பான பௌத்த கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் டென்சில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வீதி வெசாக் விளக்குகளால் அலங்கரிக்கப்படவுள்ளது.
தியவண்ணா வெசாக் வலயம், ஆயுதப் படைகளுடன் இணைந்து உருவாக்கப்படும் சிறந்த கைவினைத்திறனை வெளிப்படுத்தும் அழகாக வடிவமைக்கப்பட்ட மின்னொளி தோரணைகள் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படவுள்ளது.
அன்றைய தினம் மாலை வேளையில் முப்படையினரால் பக்திப் பாடல் இசைக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளதுடன் வெசாக் வலயத்திற்கு வருபவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள ‘தன்சல’களில் இருந்து இலவச உணவு மற்றும் பானங்களை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.