புத்தரின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணமடைதல் ஆகிய நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் நோன்மதி தினம் பௌத்த மக்களின் மிகவும் புனிதமான நாளாகும். பன்னெடுங்காலமாக இலங்கையர்களான நாம் அதனை மிகுந்த பக்தி சிரத்தையுடன் கொண்டாடி வருகின்றோம்.
இயற்கை அனர்த்தங்களாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் முடங்கியிருந்த பல வருடங்களின் பின் இலங்கையர்களான எமக்கு முழுமையான வெசாக் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகின் இயல்பு நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது உலகில் எமது வாழ்க்கை முறை அழிந்து வருகிறது. இதன் காரணமாக, உலகின் இயல்பை சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவும் பௌத்தத்தின் வழியைப் பின்பற்றி பௌத்த சமயத்தின் உண்மையான அர்தத்தைக் கண்டறிய உலக மக்கள் பௌத்த தர்மத்தை நாடிச்செல்கின்றனர். பௌத்த சமயத்தில் போதிக்கப்படும் நடுநிலை கொள்கையே அதன் தர்மப் பாதையாகும்.
எல்லா காலத்திற்குமான அதன் நடுநிலை கொள்கையானது முன்னெப்போதையும் விட இன்றைய கல்விச் சமூகத்தை வழிநடத்தும். இன்றைய உலகில் பேசப்படும் பொருளாதார அபிவிருத்திக்கு நடுத்தர கொள்கையைப் பின்பற்றுவது மிகவும் அர்த்தமுள்ளதாக விளங்குகிறது. நடுநிலைமை என்பது எப்போதும் அமைதியைத் தரும் ஒரு நடைமுறையாகும்.
வெசாக் அலங்காரங்கள் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை எடுத்துரைக்கும் ஒரு ஆழ்ந்த மனப் பயிற்சியாகும். வெசாக் அலங்காரமானது வாழ்க்கையின் சமநிலையற்ற தன்மையானது அழிவுக்கு வழிவகுக்கிறது என்பதை அனுபவத்தின் மூலம் பிள்ளைகளுக்குப் புரிந்துகொள்ள உதவுகிறது. அனுபவத்தின் மூலம் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, வெசாக் கலையை தொடர்ந்தும் உயிர்ப்போடு பேணுவதற்கு வழிசெய்வதும், பிள்ளைகளை வெசாக் அலங்காரங்களில் ஈடுபடச் செய்வதும் பெரியோர்கள் அனைவரினதும் கடமையாகும்.
உன்னதமான பெளத்த தத்துவத்தின் வழியே உண்மையான மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் அன்பு (மெத்தா), காருண்யம் (கருணா), மகிழ்ச்சி (முதிதா), பற்றின்மை (உபேக்ஷா) என்ற நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தில் எமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்வோம்.
அனைத்து உயிரினங்களும் துன்பங்கள் நீங்கி, ஆரோக்கியமும், அமைதியும் பெற்றிட எனது பிரார்த்தனைகள் !
தினேஷ் குணவர்தன (பா.உ)
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2024 மே மாதம் 23 ஆந் திகதி
a