நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “நான் சிறையில் இருந்தபோது ஏன் ராஜினாமா செய்யவில்லை என்பதை முதலில் விளக்குகிறேன். நான் பதவி பேராசை கொண்டதில்லை. நான் முதல்வராக பதவியேற்ற 49 நாளில் எனது கொள்கைகளுக்காக எந்தவித தூண்டுதலும் இல்லாமல் ராஜினாமா செய்தேன். எனவே, எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது.
இந்த முறை ராஜினாமா செய்யாமல் இருப்பது எனது போராட்டத்தின் ஒரு பகுதி என்பதால் நான் பதவி விலகவில்லை. இப்போது டெல்லியில் கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாது என்பதை பா.ஜ.க புரிந்துகொண்டிருகிறார்கள். அதனால்தான் ஒரு பொய் வழக்கில் சிக்க வைக்கிறார்கள். அப்படி செய்தால் நான் ராஜினாமா செய்துவிடுவேன், ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க முடியும் என நினைத்தார்கள். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. ஒருவேளை இன்று நான் பதவி விலகினால் நாளை மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, அதற்கடுத்து கேரளாவின் பினராயி விஜயன் என தொடர்ந்து ஆட்சியை கவிழ்ப்பார்கள்.
பா.ஜ.க எங்கு தோற்றாலும் முதல்வரை கைது செய்து அவரது ஆட்சியை கவிழ்க்கலாம் என இதையே ஒரு யுக்தியாக கடைபிடிப்பார்கள். இந்தப் போராட்டம் நடத்தப்பட வேண்டும். ஜனநாயகத்தை சிறையில் அடைத்தால், ஜனநாயகம் சிறையிலிருந்து இயங்கும். இந்த அதிகாரத்தின் கோரப் பல்லையும் நகத்தையும் எதிர்த்துப் போராடும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88