புதுக்கோட்டை தமிழக அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர் என் ரவியை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று புதுக்கோட்டையில் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துக் கொண்டார். கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார். ரகுபதி தனது பேட்டியில், “திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததால் சர்ச்சை கிளம்பியது. திரும்பவும் காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தைப் பயன்படுத்தி அழைப்பிதழ் அடித்து கவர்னர் மாளிகை வெளியிடுகிறது என்றால், கவர்னரை என்ன தான் செய்ய […]