இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வீடா எலக்ட்ரிக் பிராண்டில் ஏற்கனவே விற்பனையில் உள்ள V1 இ-ஸ்கூட்டரை விட மிக குறைந்த விலையில் ஒரு மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் ஹீரோ நிறுவனம் இந்திய அரசின் PLI (Production Linked Incentive) திட்டத்தின் சலுகைகளை பெறுவதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், ரூ.1 லட்சம் விலைக்கு குறைவாக வெளியிட உள்ள இ-ஸ்கூட்டர் 80 முதல் 100 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம். மேலும் மற்றொரு மாடல் பிரீமியம் வசதிகளை கொண்டதாக வி1 மாடலை விட கூடுதலான வசதிகள் பிரீமியம் அம்சத்தை பெற்றதாக அமைந்துள்ளது.
தற்பொழுது சந்தையில் உள்ள வி1 பிளஸ் மற்றும் வி1 புரோ மாடல்கள் விலை ரூ. 1.20 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கிடைத்து வருகின்றது.
3.44kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 85 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, V1 Pro மாடல் சற்று பெரிய 3.94kWh பேட்டரியைப் பெற்றுள்ளது. இதன் ரேஞ்சு 95 கிமீ வரை கிடைக்கும்.
குறைந்த விலை 1 லட்சத்துக்கு இ-ஸ்கூட்டர் விடா மாடல் விற்பனைக்கு அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் வரக்கூடும் என ஹீரோ உறுதிப்படுத்தியுள்ளது. இதுதவிர பல்வேறு பிரீமியம் பைக்குகளை அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே சந்தையில் உள்ள ஓலா S1X, ஏதெர் ரிஸ்டா, டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்ட மாடல்களுடன் வரவுள்ள சேட்டக் புரோ 2024 ஆகிய மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.