ரஷியாவில் ஊழல் குற்றச்சாட்டில் மேலும் இரண்டு ராணுவ அதிகாரிகள் கைது

மாஸ்கோ,

ரஷியாவில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகள் பெரிய அளவில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அதிபர் புதின் 5-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த ஷெர்ஷி சோய்கு மாற்றப்பட்டார். பின்னர் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

அதன்படி கடந்த வாரம் ராணுவ தளபதி இவான் போபோவ் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் சுமார் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் தற்போது மேலும் இரண்டு ராணுவ அதிகாரிகளை ஊழல் குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷியப் படைகள் உக்ரேனில் சண்டையிடும் நேரத்தில், லாபகரமான இராணுவ ஒப்பந்தங்களை வழங்குவதில் செய்கின்ற ஊழலை ஒழிப்பதற்கான ஒரு பெரிய முயற்சியை இது காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.