ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு GT சீரிஸ் மாடல் போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ரியல்மி.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது.

ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. பிரீமியம் விலையிலான போன்களையும் விற்பனை செய்து வருகிறது. தற்போது ரியல்மி GT 6T மாடல் அறிமுகமாகி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரேஷன் 3 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்டை ரியல்மி உறுதி செய்துள்ளது
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் Sony LYT 600 கேமரா பிரதானமானதாக உள்ளது
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • 5,500mAh பேட்டரி
  • இந்த போனின் விலை ரூ.30,999 முதல் ஆரம்பமாகிறது. வரும் 29-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது
  • விலையில் அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.