பார்தி ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு ஒரு ரீச்சார்ஜ் பிளானுடன் நெட்ஃபிக்ஸ் அடிப்படை சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. தினசரி டேட்டாவைத் தவிர, இந்த திட்டம் தினசரி எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு போன்ற பலன்களையும் வழங்குகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கு பல ரீச்சார்ஜ் திட்டங்களுடன் ஓடிடி பிளான்களை கொடுக்கிறது. இது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை தக்கவைப்பதற்கும் எல்லா டெலிகாம் நிறுவனங்களும் கொடுக்கக்கூடிய சலுகை தான். அதில் ஏர்டெல் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த சில கவர்ச்சிகரமான சலுகைகளை அவ்வப்போது கொடுக்கும். பெரும்பாலும் சினிமா பிரியர்கள், வெப் சீரிஸ் பார்க்ககூடியவர்கள் ஓடிடி பிளான்களை தேர்ந்தெடுப்பது வழக்கம்.
எப்போதாவது படம் பார்க்க விரும்புபவர்கள்கூட கூடுதல் சலுகைகள் கிடைக்கும்போது சில பேஸிக் ஓடிடி பிளான்களை தேர்ந்தெடுப்பார்கள். அந்தவகையில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் நெட்பிளிக்ஸ் சந்தாவை பெறுவது எப்படி?, அது எந்த ரீச்சார்ஜ் பிளானுடன் சேர்ந்து வருகிறது என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். ஏர்டெல் நிறுவனத்தின் சிறப்புத் திட்டத்தில் தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளைத் தவிர, இந்த திட்டம் அன்லிமிடெட் அழைப்புகளையும் பெறலாம். ஸ்மார்ட் டிவி மற்றும் லேப்டாப் போன்ற பெரிய ஸ்கிரீனில் கூட நீங்கள் வீடியோக்களை பார்க்க முடியும்.
ஏர்டெல் இலவச Netflix பிளான்
ஏர்டெல் இலவச நெட்ஃபிக்ஸ் சந்தாவை வழங்கும் திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதன் விலை ரூ.1,499 ஆகும். இந்த திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டாவின் பலனை வழங்குகிறது. இது தவிர, அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் அனுப்பும் விருப்பமும் வழங்கப்படுகிறது. ஏர்டெல்லின் இந்த திட்டம் முழு செல்லுபடியாகும் காலத்திற்கு Netflix அடிப்படை சந்தாவை வழங்குகிறது. இது தவிர, தகுதியான சந்தாதாரர்கள் இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற 5G டேட்டாவுக்கான அணுகல் வழங்கப்படுகிறது. இதற்கு, நிறுவனத்தின் 5G சேவைகள் கிடைக்கும் பகுதியில் இருக்க வேண்டும். யூசரிடம் 5G போன் இருக்க வேண்டும்.
ஜியோ பயனர்களுக்கும் விருப்பங்கள் உள்ளன
ரிலையன்ஸ் ஜியோ இலவச நெட்ஃபிக்ஸ் அடிப்படை மற்றும் இதே போன்ற பலன்களுடன் அதே விலையில் ஒரு திட்டத்தை வழங்குகிறது. இருப்பினும், ஜியோ 1,099 ரூபாய்க்கான மலிவான திட்டத்தை வழங்குகிறது, இதில் Netflix அடிப்படை சந்தாவும் அடங்கும். ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பிடும்போது ஜியோவின் நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளான் விலை 400 ரூபாய் குறைவாக கிடைக்கும்.