ஜியோசினிமா செயலியை நாளையுடன் Uninstall செய்கிறீர்களா? அதுக்கு முன்னாடி இதை கொஞ்சம் பாருங்க!

Jio Cinema Premium Yearly Plan: நடப்பு ஐபிஎல் தொடர் நீங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பவர் என்றால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்த்து வந்திருப்பீர்கள். அதுவே, மொபைலிலோ அல்லது லேப்டாப்பிலோ நீங்கள் ஓடிடி மூலம் என்றால் ஜியோசினிமா செயலியில் போட்டியை பார்த்திருப்பீர்கள். கடந்தாண்டு முதல்தான் ஐபிஎல் போட்டியை ஜியோசினிமா ஸ்ட்ரீம் செய்து வருகிறது. அதற்கு முன் டிஸ்னி+ ஹார்ட்ஸ்டாரில்தான் ஐபிஎல் போட்டி ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வந்தது. 2027ஆம் ஆண்டு வரை ஜியோசினிமா செயலி ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. 

ஐபிஎல் தொடருக்காக மட்டுமே இந்தியாவில் பலரும் ஜியோசினிமா செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஐியோசினிமா செயலி பல்வேறு மொழிகளின் வெப்-சீரிஸ்கள், திரைப்படங்கள் ஆகிய உள்ளடக்கங்களை பெற்றுள்ளது. குறிப்பாக Peacock, HBO நிறுவனங்களின் உள்ளடக்கங்களும் தற்போது அதில் கிடைக்கின்றன. இருப்பினும் பலரும் ஐபிஎல் தொடருக்காக மட்டுமே ஜியோசினிமா செயலியை மொபைலில் வைத்திருக்கின்றனர். இன்று மொபைலில் அந்த செயலியை வைத்திருக்கும் பலரும் நாளை இறுதிப்போட்டி முடிந்த கையோடு Uninstall செய்துவிடுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இலவச ஸ்ட்ரீமிங்

ஹாட்ஸ்டார் செயலியில் நீங்கள் ஐபிஎல் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு சந்தா தேவைப்பட்ட நிலையில், ஜியோசினிமா தான் கடந்தாண்டு இலவசமாக ஐபிஎல் போட்டியை மொபைலிலேயே பார்க்கலாம் என வசதியை கொண்டு வந்தது. அதை தொடர்ந்து, ஐசிசி உலகக் கோப்பை தொடரை ஸ்ட்ரீம் செய்த ஹாட்ஸ்டார் அதனை இலவசமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது, இலவசமாக பார்க்கவும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது. 

அந்த வகையில், தொலைத்தொடர்பு துறையில் ஜியோ எப்படி தனித்த நிறுவனமாக இருக்கிறதோ தற்போது ஜியோசினிமா செயலியும் ஓடிடிகளில் தனித்த ஒன்றாக உருவெடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஐபிஎல் தொடர் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் வாடிக்கையாளர்களை தக்கவைக்க என்னென்ன விஷயங்களை செய்யலாம் என ஜியோசினிமா முழு வீச்சில் இயங்கி வருகிறது.அந்த வகையில், ஜியோசினிமா செயலியின் Premium கணக்கும் அதில் முக்கிய ஒன்றாகும். 

முந்தைய பிளான்கள்

ஜியோசினிமா இதற்கு முன் மாதம் 29 ரூபாய்க்கு பிரீமியம் பிளானை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதில் விளம்பரம் இல்லாமல் படங்களையோ அல்லது மற்ற நிகழ்ச்சிகளையோ நீங்கள் கண்டுகளிக்கலாம். இதன்மூலம், ஜியோசினிமா செயலியில் கிடைக்கும் அனைத்து Premium கண்டென்ட்களையும் பார்க்கலாம். டவுண்லோட் செய்து அந்த ஒரு மாதத்திற்கு எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் ஒரே ஒரு சாதனத்தில் மட்டுமே லாக்இன் செய்ய இயலும். இந்த பிளானின் ஒரிஜினல் விலை 59 ரூபாயாகும். தற்போது 51 சதவீத தள்ளுபடியுடன் 29 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

அதேபோல், ஜியோ சினிமாஸ் குடும்பத்தினருக்கு என ஒரு மாதாந்திர பிளானை கொண்டு வந்தது. இது ஒரு மாதத்திற்கு 89 ரூபாயாகும். இதில் மேலே 29 ரூபாய் பிளானிற்கு சொன்ன அனைத்து பலன்களுடன் நான்கு சாதனங்கள் வரை இணைத்துக்கொள்ளலாம். இதுவும் ஒரு மாதத்திற்கு 149 ரூபாயாக இருந்த நிலையில், 40 சதவீத தள்ளுபடியுடன் 89 ரூபாய்க்கு இந்த பிளான் கிடைக்கிறது. 

புதிய பிளான்

இந்த நிலையில்தான் ஜியோசினிமா அதன் புதிய வருடாந்திர பிளானை கொண்டு வந்துள்ளது. மேலும், இது குடும்பத்தினருக்கு கிடையாது, தனிநபர்களுக்குதான். அதாவது ஒரு சாதனம் மட்டும் பயன்படுத்த முடியும். 12 மாதங்களுக்கான இந்த பிளானின் விலை 299 ரூபாய் ஆகும். அதாவது இந்த திட்டத்தின் விலை 599 ரூபாயாகும். தற்போது 50 சதவீ தள்ளுபடியில் 299 ரூபாயில் கிடைக்கிறது. 

இந்த புதிய பிளானில் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் நேரலை நிகழ்வுகளில் விளம்பரம் வரும் என்றாலும் மற்ற கண்டெண்ட்களில் விளம்பரம் வராது. 4K Resolution வரை இந்த பிளானில் நீங்கள் பார்க்கலாம். HBO, Peacock, Warner Bros, Paramount, Universal Pictures ஆகியவற்றின் கண்டெண்ட்கள் ஜியோசினிமா பிரீமியரில் கிடைக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.