கொரோனா வைரஸூக்குப் பிறகு இந்தியாவில் கேமிங் துறை பூதாகரமாக வளர்ந்துவிட்டது. சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கேமிங்களுக்கு அடிமையான நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தோனியும் கேமிங் விளையாடி பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறாராம். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போது மட்டும் முழுமையாக கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் அவர், மற்ற நேரங்களில் விவசாயம் உள்ளிட்ட வேலைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். தனக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் காடுகளை டிராக்டர் மூலம் உழுது, விரும்பும் பயிர்களை நட்டு வளர்த்துக் கொண்டிருக்கும் தோனி, வீடியோ கேமிங் விளையாடுவதையும் பழக்கமாக வைத்திருக்கிறாராம்.
அதிலும் ஐபிஎல் கிரிக்கெட்டின்போது பிளைட்டில் செல்லும்போதெல்லாம் கேண்டி கிரஷ் சாகா கேமை விளையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அப்படி கடந்த ஆண்டு ஐபில் கிரிக்கெட்டின்போது பிளைட்டில் சென்ற அவர் கேண்டி கிரஷ் கேம் விளையாடி இருக்கிறார். அந்த நேரம் பார்த்து விமான பணிப்பெண் தோனிக்கு உணவுகளை வழங்க செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோவில் அவர் ஐபேடில் கேண்டி கிரஷ் கேம் விளையாடுவது பதிவானது. அப்போது முதல் கேண்டி கிரஷ் கேம் கிரிக்கெட் ரசிகர்களிடமும் பரவலானது.
இந்த விளையாட்டு மிகவும் பிரபலமானது தான். இது 2012 இல் தொடங்கப்பட்டது. எல்லா வயதினரும் விரும்பும் ஒரு விளையாட்டு கேண்டி கிரஷ் சாகா. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டின் மீது பைத்தியம் பிடித்துள்ளனர். கோடிக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்ததற்கு இதுவே காரணம். இதுகுறித்து எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அண்மைக் காலத்தில் அதிகமாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட கேம்களில் முன்னணியில் இந்த கேம் இருக்கிறது தெரியவந்தது. நீங்களும் இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் ப்ளே ஸ்டோருக்குச் செல்ல வேண்டும். அதில் கேண்டி கிரஷ் சாகா என டைப் செய்தால் இந்த விளையாட்டை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். இதில் பல்வேறு நிலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை ஒவ்வொன்றாக கடக்க வேண்டும். முதலில் உங்களுக்கு ஈஸியாக இருப்பதுபோல் தெரியும், ஆனால் அடுத்தடுத்த நிலைகள் மிகப்பெரும் சவாலாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். அதனால் கேண்டி கிரஷ் நீங்கள் விளையாட தொடங்கினீர்கள் என்றால், அந்த கேம் மீது நீங்கள் கிஷ்ஷாகிவிடுவீர்கள்.