இஸ்லாமாபாத்: கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது பாகிஸ்தான். சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி மூலம் பொருளாதார நெருக்கடியை அந்த நாடு சமாளித்து வருகிறது.
சர்வதேச செலாவணி நிதியத்திடமிருந்து (ஐஎம்எஃப்) பாகிஸ்தான் 3 பில்லியன் டாலர் நிதி உதவியை ஏற்கெனவே பெற்றுள்ளது. இந்நிலையில் கூடுதலாக, 6 பில்லியன் டாலர் முதல் 8 பில்லியன் டாலர் வரையில் நிதி உதவி கேட்டு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது.
இதுதொடர்பாக ஐஎம்எஃப் மற்றும் பாகிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் நிதி உதவியை அதிகரிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.