பிரசத்தி பெற்ற நடுத்தர எஸ்யூவி சந்தையில் கிரெட்டா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்ற கியோ செல்டோஸ் காரின் துவக்க நிலை HTE வேரியண்ட் உட்பட HTK மற்றும் HTK+ வேரியண்டுகளின் நிறங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தற்பொழுது டூயல் டோன் வன்ன விருப்பங்களை செல்டோஸ் GT லைன் வேரியண்டுகளில் மட்டும் பெறுகின்றது. மற்றபடி முன்பாக துவக்க நிலை HTE வேரியண்டில் வழங்கப்பட்டு கிளியர் வெள்ளை, ஸ்பார்க்கிங் சில்வர் தவிர கூடுதலாக இப்பொழுது பியூட்டர் ஆலிவ், கிராவிட்டி கிரே, அரோரா பிளாக் பெர்ல், இன்டென்ஸ் ரெட் மற்றும் இம்பீரியல் ப்ளூ என மொத்தமாக 7 நிறங்களை பெறுகின்றது.
HTK மற்றும் HTK+ வேரியண்டுகளில் இப்பொழுது அரோரா பிளாக் பெர்ல், கிளியர் வெள்ளை, ஸ்பார்க்கிங் சில்வர் நிறங்களும் கிடைக்கின்றது. 2024 கியா செல்டோஸ் எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.10.90 லட்சத்தில் துவங்குகின்றது.
இந்த மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகன், மற்றும் ஹோண்டா எலிவேட் உட்பட மஹிந்திராவின் XUV700, டாடா ஹாரியர், சஃபாரி உள்ளிட்ட மாடல்களும் இருக்கின்றன.