2024 ஆம் ஆண்டிற்கான ஜாவா 42 பாபெர் ஸ்டைல் மோட்டார்சைக்கிளில் கூடுதலாக red sheen என்ற வேரியண்ட்டை விற்பனைக்கு ரூ.2,29 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே விலையில் முன்பாக பிளாக் மிரர் எடிசன் கிடைக்கின்றது.
விற்பனையில் உள்ள பிளாக் மிரர் எடிசனில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் ரெட் ஷீன் வேரியண்டில் டேங்க் உட்பட சில பாகங்களில் சிவப்பு மற்றும் க்ரோம் பூச்சூ கொடுக்கப்பட்டு மற்றபடி, பைக் முழுமைக்கும் கருப்பு நிறம் பெற்றுள்ளது. டியூப்லெஸ் டயருடன் டயமண்ட் கட் அலாய் வீல் கொண்டுள்ளது.
ஜாவா 42 பாபெர் பைக்கில் லிக்யூடு கூல்டு 334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 29 hp பவர் மற்றும் 32.7 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு பெற்றுள்ள மாடலில் 18 அங்குல வீல் கொண்டு பின்புறத்தில் ஒற்றை மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று 17 அங்குல வீல் பின்புறத்தில் கொண்டுள்ளது. 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக அமைந்துள்ளது.
தற்பொழுது வந்துள்ள புதிய ஜாவா 42 பாபெர் விலை ரூ.2,28,187 (எக்ஸ்ஷோரூம் சென்னை) ஆகும்.
புதிய தலைமுறை ரைடர்களுக்கு தனித்துவமான ரைடிங் அனுபவத்தை வெளிப்படுத்துகின்ற ஜாவா 42 பாபெர் ஒரு அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது, மேலும் ரெட் ஷீனின் அறிமுகத்துடன் குடும்பத்தை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்கிறார் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்களின் CEO ஆஷிஷ் சிங் ஜோஷி தெரிவித்துள்ளார்.