மாதம் 2.50 இலட்சத்திற்கும் கூடுதலாக விற்பனை ஆகின்ற ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு போட்டியாக வந்த ஹோண்டா ஷைன் 100 முதல் வருடத்தில் மூன்று லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது.
100-110சிசி சந்தையில் உள்ள பல்வேறு மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் ஆனது மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. குறிப்பாக மிகச் சிறப்பான மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் அமோக வரவேற்பினை பெறுவதாக ஹோண்டா தெரிவித்துள்ள நிலையில் நாடு முழுவதும் 6000-க்கும் மேற்பட்ட ஹோண்டாவின் டீலர்கள் மூலம் இந்த மாடல் விற்பனை செய்யப்படுகின்றது.
ஹோண்டாவின் ஷைன் 100 பைக்கின் முதல் வருட நிறைவு குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தலைவர் மற்றும் சிஇஓ திரு. Tsutsumu Otani பேசுகையில், Shine 100 தனது முதல் ஆண்டை எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்புடன் நிறைவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மலிவு விலையில் நம்பகமான தயாரிப்புகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. மதிப்பு மற்றும் மன அமைதிக்கான உரிமை அனுபவத்தை வழங்குவதில் ஹோண்டாவின் அர்ப்பணிப்பை உள்ளடக்கியது. எதிர்பார்ப்புகளை மீறிய தயாரிப்புகளை வழங்குவதிலும், இந்திய சந்தையில் எங்களது சந்தையை வலுப்படுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்” என்றார்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் திரு. யோகேஷ் மாத்தூர் ஷைன் 100 கூறுகையில், முதல் ஆண்டில் கிடைத்த வரவேற்பால் நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இந்த பிரிவில் வலுவான போட்டியாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, ஷைன் 100 மோட்டார்சைக்கிளின் தற்கால வடிவமைப்பு, சிறந்த மைலேஜ் மற்றும் பணத்திற்கான கவர்ச்சிகரமான அம்சத்தை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க – ஷைன் 100 Vs போட்டியாளர்களுடன் ஒப்பீடு