மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக எந்தவித விளம்பரத்தையும் பாஜக வெளியிடக்கூடாது என கொல்கத்தா நீதிமன்ற தனி நீதிபதி கடந்த 20-ம் தேதி தடை விதித்தார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த தடையை அவர் விதித்திருந்தார். இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. அப்போது அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதி தீர்ப்பில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து நேற்று பாஜக சார்பில், உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வரும் திங்கள்கிழமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து பரிசீலிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.