மேட் இன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் என இரு மாடல்களும் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதனால் மிகப்பெரிய அளவில் ரூ.29 லட்சம் முதல் ரூ.56 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த இந்த இரு எஸ்யூவி மாடல்கள் முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றது. இதற்கு முன்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பிரத்தியேக ஜேஎல்ஆர் தொழிற்சாலையில் வேலார், எவோக், ஜாகுவார் F-Pace, மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகியவை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகின்றது.
ரூ.44 லட்சம் வரை குறைக்கப்பட்டு 3.0 லிட்டர் டீசல் HSE LWB வேரியண்ட் ரூ.2.36 கோடி, அடுத்து 3.0-லிட்டர் பெட்ரோல் Autobiography LWB விலை அதிகபட்சமாக ரூ.56 லட்சம் வரை குறைக்கப்பட்டு 2.60 கோடியாக உள்ளது.
3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் பெட்ரோல் 392hp மற்றும் 550Nm மற்றும் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் டீசல் 345hp மற்றும் 700Nm டார்க் வெளிப்படுதுகின்றது.
உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவரின் டெலிவரி துவங்கியுள்ள நிலையில், ஜே.எல்.ஆர்., தலைமை வர்த்தக அதிகாரி லெனார்ட் ஹூர்னிக் இதுபற்றி பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளில், இந்தியா நிலையான மற்றும் அற்புதமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது, மேலும் எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ச்சியடையத் தயாராக உள்ளது.
எனவே, இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தயாரிப்பு உள்ளூர்மயமாக்குவதற்கான மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் உள்ளூர் உற்பத்தியின் மூலம் சிறப்பான வளர்ச்சியை ஆடம்பர எஸ்யூவி சந்தையில் அமோக வளர்ச்சி பெறும் என தெரிவித்துள்ளார்.