6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கிய முதல் கட்ட தேர்தலை தொடர்ந்து, அம்மாதம் 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், 6-வது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் 58 தொகுதிகளில் நடைபெறுகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் 14, ஹரியானாவில் 10, மேற்கு வங்கத்தில் 8, பிகாரில் 8, டெல்லியில் 7, ஒடிசாவில் 6, ஜார்க்கண்டில் 4, காஷ்மீரில் 1 தொகுதி என 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்றைய தேர்தலில் இரு முதல்வர்கள் களம் காண்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் மனோகர் லால் கட்டார் ஹரியானாவிலும், மெகபூபா முப்தி காஷ்மீரிலும் போட்டியிடுகிறார்கள். தவிர, முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உட்பட மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88