நாடாளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 61.2 சதவீத வாக்குப்பதிவு

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த 20-ந் தேதி 5-வது கட்ட தேர்தல் நடந்தது. இந்நிலையில், நேற்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், அரியானா, ஒடிசா ஆகிய 6 மாநிலங்களிலும், டெல்லி, காஷ்மீர் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 58 நாடாளுமன்ற தொகுதிகள், 6-ம் கட்ட வாக்குப்பதிவை சந்தித்தன.

அத்துடன், ஒடிசா மாநில சட்டசபைக்கு 42 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு நேரம் செல்லச்செல்ல சூடு பிடிக்க ஆரம்பித்தது. விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 58 தொகுதிகளில் இரவு 11.45 மணி நிலவரப்படி 61.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த 6 கட்ட தேர்தல்களில் மிக குறைவான வாக்குப்பதிவு சதவீதம் 6-ம் கட்ட தேர்தலில் தான் பதிவாகியுள்ளது.

மாநிலம் வாரியாக விவரங்கள் :

பீகார் – 52.2 சதவீதம்

டெல்லி – 57.67 சதவீதம்

அரியானா – 60.4 சதவீதம்

ஜம்மு காஷ்மீர் – 54.3 சதவீதம்

ஜார்க்கண்ட் – 63.76 சதவீதம்

ஒடிசா – 69.56 சதவீதம்

உத்தர பிரதேசம் – 54.03 சதவீதம்

மேற்கு வங்கம் – 79.47 சதவீதம்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.