சென்னை மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு தோள்பட்டையி எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவம்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இயக்க தலைவர் வைகோ வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. வைகோவின் மகனும், ம.தி.மு.க. கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ இந்த தகவலை தெரிவித்துள்ளார். இன்று துரை வைகோ வெளியிட்டுள்ள எக்ஸ் […]