EV கார்களுக்கு ஆப்பு வைக்க வரும் 'இந்த' கார்கள்… காரணம் என்ன?

Hybrid Cars Sales In India 2024: இந்திய சந்தையில் EV கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தொடர்ந்து பல நிறுவனங்கள் EV கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். SUV கார்களிலும் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி ஹைபிரிட் கார்களும் விற்பனையில் உள்ளன. அதாவது, பெட்ரோசல் அல்லது டீசல் எரிவாயு மற்றும் எலெக்ட்ரிக் ஆகியவற்றால் இயங்கக்கூடியவை. 

SUV கார்களில் EV மட்டுமின்றி ஹைபிரிட் கார்களும் தற்போது விற்பனையில் பட்டையை கிளப்பி வருகின்றனர். மாருதி சுசுகி, டோயோட்டா மோட்டார் ஆகிய நிறுவனங்கள் ஹைபிரிட் SUV கார்களை அதிகமாக விற்பனை செய்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நடந்த மொத்த பயணிகள் கார் விற்பனையில் ஹைபிரிட் கார்களின் பங்கு என்பது 2.48% ஆக உள்ளது. இதில், EV கார்களின் பங்கு என்பது 2.63% ஆகும்.

தயாரிப்பில் இறங்கும் மற்ற நிறுவனங்கள்

அதாவது, EV கார்களின் விற்பனையை ஹைபிரிட் கார்கள் நெருங்கிவிட்டன எனலாம். இதனால், மாருதி சுசுகி, டோயோட்டா நிறுவனங்களை போன்று ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா உள்ளிட்ட நிறுவனங்களும் ஹைபிரிட் வாகனங்களை தயாரிப்பதற்கான முயற்சியில் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம், EV கார்களின் விற்பனையை ஹைபிரிட் கார்கள் இந்த ஆண்டிலேயே மிஞ்சலாம் என கூறப்படுகிறது.

இப்போது ஹைபிரிட் கார்களை மாருதி சுசுகி, டோயோட்டா நிறுவனங்களை தவிர ஹோண்டா மோட்டார் நிறுவனம் மட்டுமே இந்தியாவில் இதனை விற்பனை செய்து வருகிறது. இதில் எலெக்ட்ரிக் மோட்டாருடன் எரிவாயு எஞ்சின் உள்ளது. இதனால் கார்பன் உமிழ்வு குறைகிறது மற்றும் எரிவாயு சேமிப்பு அதிகமாகிறது. மைலேஜ் நல்ல கிடைக்கிறது. 

ஏன் ஹைபிரிட் கார்கள்…?

எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு என்பது வாகனங்களால் ஏற்படக்கூடிய மாசுபாட்டை குறைக்கும் என்பதன் அடிப்படையில் மக்களிடம் சென்றடைந்துள்ளது. எனவே, அதற்கிருந்த வரவேற்பை தற்போது ஹைபிரிட் வாகனங்கள் தட்டி பறிக்கின்றன எனலாம். எலெக்ட்ரிக் கார்களை வைத்திருக்கக் கூடிய மக்கள் அதிகம் சிரமத்தை சந்திப்பது எதனால் என்றால் பெருநகரங்களுக்கு வெளியே வாகனங்களை எடுத்துச் செல்லும் போது அங்கு போதுமான அளவிற்கு பேட்டரி ரீசார்ஜ் வசதிகள் இல்லாதது எனலாம். குறிப்பாக, ஒரு பேட்டரியின் ரேஞ்சை பொறுத்தே அவர்களால் கார்களை இயக்க முடிகிறது. எனவேதான், எலெக்ட்ரிக் மோட்டாருடன் கூடிய ஹைபிரிட் கார்களை நோக்கி மக்கள் செல்ல தொடங்கியிருக்கிறார்கள் என கூறலாம்.

முன்னணியில் டோயோட்டா

இத்தகைய ஹைபிரிட் கார் தயாரிப்பில் ஜப்பானிய நிறுவனமான டோயோட்டா முன்னணி வகிக்கிறது. செல்ஃப் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்ட இந்த நிறுவனத்தின் ஹைபிரிட் கார்கள், எலெக்ட்ரிக் மோடிலும், எரிவாயு மோடிலும் அல்லது இரண்டிலும் ஒரே நேரத்திலும் இயங்கும். 
இவை ஸ்ட்ராங் ஹைபிரிட்ஸ் என அழைக்கப்படுகின்றன.  அதாவது, பெட்ரோல் எஞ்சின் மூடிய நிலையில் மின்சார பயன்முறையில் 40% தூரத்தையும், 60% நேரத்தையும் இந்த கார் கடக்கும் என கூறப்படுகிறது. இது 40%-50% எரிபொருள் சேமிப்பை ஏற்படுத்துகிறது, கார்பன் உமிழ்வையும் குறைக்கிறது என்கிறார் டோயோட்டா நிறுவன அதிகாரி ஒருவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.