Human Milk: `இந்தியாவில் தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதியில்லை, மீறினால்…' – எச்சரிக்கும் FSSAI!

இந்தியாவின் உச்ச உணவு ஒழுங்குமுறை ஆணையமான, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும், அதற்கான உரிமங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறும் மாநில உரிம அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தாய்ப்பால் மற்றும் அதன் தயாரிப்புகளை வணிகமயமாக்குவது தொடர்பாக பல்வேறு பதிவுசெய்யப்பட்ட சங்கங்களிலிருந்து பல அனுமதிப் படிவங்கள் வந்திருக்கின்றன.

தாய்ப்பால்

பொதுச் சுகாதார பாலூட்டும் மையங்கள் (LMC) வழிகாட்டுதல்களின்படி, நன்கொடையாளர் தாய்ப்பாலை எந்தவொரு வணிக நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாது. குழந்தைகளுக்கு மட்டுமே இது வழங்கப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்களிடமிருந்து பெறப்பட்ட மனித தாய்ப்பாலை, விற்பனை நோக்கங்களுக்காகத் தூள் வடிவில் பதப்படுத்தும் பல நிறுவனங்கள் உருவாகியுள்ளன.

தாய்ப்பால் மற்றும் அதன் தயாரிப்புகளின் வணிகமயமாக்கல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தாய்ப்பாலை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவது விதி மீறலாகும். FSSAI, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 மற்றும் அதன் தொடர்புடைய விதிமுறைகளின் கீழ் எந்தவொரு மீறலும் தண்டனைக்குரிய நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.

fssai

நியோலாக்டா எனும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம் பெங்களூரில் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்திடமிருந்து உரிமம் பெற்று, தாய்ப்பாலை வணிகமயமாக்குவதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. பி.பி.என்.ஐ-யின் புகாரைத் தொடர்ந்து அந்த உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.