திருநெல்வேலி நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் மர்ம மரணம் குறித்த விசாரணைக்காக 30 க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த 2 ஆம் தேதி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் காணாமல் போனதாக அவரின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 4 ஆம் தேதி திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூர் பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். […]