கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே காரச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சுமார் 80 அடியில் ஒரு கிணறு உள்ளது. இந்நிலையில் நேற்று அந்தக் கிணற்றில் எதிர்பாராத விதமாக கருப்பசாமி என்பவரின் நாய் தவறி விழுந்தது.
கிணற்றில் தண்ணீர் இல்லை. இருந்தபோதும் நாயால் வெளியே வரமுடியாமல் தவித்தது. இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து கயிறு கட்டி கிணற்றுக்குள் சென்று, நாயை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
ஆனாலும் நாய், தன்னை மீட்ட தீயணைப்பு வீரரை விட்டு பிரிய மனமில்லாமல் கொஞ்சி அவரின் கால்களையே சுற்றி சுற்றி வந்தது.
தீயணைப்பு வீரர்களும் நாயின் பாசத்தில் உடனடியாக அங்கிருந்து செல்ல முடியாமல், “ஏய் எங்களுக்கு வேற இல்லையா.. போடா அந்தப் பக்கம்.” என்று செல்லமாக சொல்லி சென்றனர்.
இது தீயணைப்பு வீரர்கள் மற்றும் நாயின் உரிமையாளரை நெகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88