சிறந்த மைலேஜ், அதிக ரீசேல் மதிப்பு உள்ள 100சிசி பைக்குகளின் சிறப்புகள்

இந்தியாவின் மிகவும் நம்பகமான 100சிசி பைக்குகளில் முதலிடத்தை ஹீரோ ஸ்பிளெண்டர்+ பெற்றுள்ள நிலையில் மற்ற இடங்களில் ஹீரோ பேஷன்+, ஹீரோ HF டீலக்ஸ், ஹோண்டா ஷைன் 100, மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 ஆகியவற்றின் விலை, நுட்பவிபரங்கள் மற்றும் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் மாதம் தோறும் 4 முதல் 4.50 லட்சத்திற்கும் கூடுதலான 100சிசி மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று அதிகப்படியான மைலேஜ், மறுவிற்பனை மதிப்பு, தரம் உள்ளிட்ட காரணங்களால் ஸ்பிளெண்டர் பிளஸ் முன்னிலை வகிக்கின்றது.

எந்த 100 சிசி பைக்கை வாங்கலாம்

குறிப்பாக நவீனத்துவமான வசதிகளான ப்ளூடூத் இணைப்பின் மூலம் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை 100சிசி சந்தையில் ஹீரோ நிறுவனம் ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் மாடலில் வழங்குகின்றது. அதே நேரத்தில் மிகச் சிறப்பான வசதிகள் மற்றும் அதிகப்படியான ரீசேல் வேல்யூ உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து ஸ்ப்ளெண்டர் பிளஸ் தான் முதலிடத்தில் வருகின்றது. குறைந்த விலை மாடல்களையும் ஹீரோ நிறுவனம் HF100 மற்றும் எச்எஃப் டீலக்ஸ், மட்டுமல்லாமல் பேஷன் பிளஸ் ஆகிய மாடல்களையும் விற்பனை செய்கின்றது.

மேலும், ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஷைன் 100 மாடலானது மாதம் தோறும் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகின்றது. நேரடியாக ஸ்பிளெண்டிற்கு சவால் விடுத்தாலும் கூட பெரிய அளவிலான விற்பனை இன்னைக்கு எட்டவில்லை என்றாலும் இந்த மாடலுக்கும் வரவேற்பு உள்ளது.அடுத்தபடியாக, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிளாட்டினா 100 மாடல் இந்த வரிசையில் போட்டியிடுகின்றது.

கீழே உள்ளவற்றில் எஞ்சின் தொடர்பான விபரங்கள் மைலேஜ் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் துவக்கப்பட்ட உள்ளது இவற்றில் விரிவான முறையில் அலசி உங்களுக்கு விருப்பமான பைக்கை நீங்கள் தெரிந்து எடுக்கலாம்.

2024 Hero Splendor+

ஹீரோ நிறுவனம் ஸ்பிளெண்டர் பிளஸ் மற்றும் ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் என இரண்டு விதமாக சுமார் 5 விதமான வேரியண்ட் பெற்றுள்ள ஸ்பிளெண்டரில் 11 நிறங்களும் ஒற்றை வேரியண்ட்டை கொண்டுள்ள எக்ஸ்டெக் ஆனது 4 நிறங்களை பெற்றுள்ளது.

97.2cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000rpmல் 8.02PS பவர், 6000rpmல் 8.05Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடல் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ஐ3எஸ் நுட்பத்தை பெற்றுள்ள இந்த மாடலின் டாப் வேரியண்ட் பெற்றுள்ளன.

முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெறுகின்ற ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் வேரியண்டில் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட், நிகழ் நேர மைலேஜ் உள்ளிட்ட விபரங்களை பெற முடியும் இந்த வசதி வேறு எந்த 100சிசி மோட்டார்சைக்கிளிலும் இல்லை.

இரு பக்க டயரிலும் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்ற 2024 ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் மைலேஜ் சராசரியாக லிட்டருக்கு 70 கிமீ முதல் 75 கிமீ வரை வழங்குகின்றது. ரூ.75,591 முதல் ரூ.79,911 வரை (எக்ஸ்ஷோரூம்) உள்ள ஸ்பிளெண்டரின் வேரியண்ட் வாரியான ஆன்ரோடு விலை பட்டியல் பின் வருமாறு;-

எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
SPLENDOR + DRUM BRAKE ₹ 75,591 ₹ 91,796
SPLENDOR + i3S DRUM BRAKE ₹ 76,676 ₹ 94,321
SPLENDOR + i3S DRUM Black & Accent ₹ 76,676 ₹ 94,321
SPLENDOR + i3S DRUM Matte Axis grey ₹ 78,176 ₹ 96,653
SPLENDOR + i3S Xtech DRUM BRAKE ₹ 79,911 ₹ 98,432

(All price Tamil Nadu)

2024 Hero Passion+

அடுத்து மாதந்தோறும் 25,000க்கு கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்ற பேஷன்+ அமோக ஆதரவினை பெற்றுள்ள இந்த மாடலிலும் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் உள்ள அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.

ஐ3எஸ் நுட்பத்துடன் கூடிய 97.2cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000rpmல் 8.02PS பவர், 6000rpmல் 8.05Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடல் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் 4 விதமான நிறங்களை பெற்று டிரம் பிரேக் கொண்டுள்ள 2024 பேஷன் பிளஸ் பைக்கின் விலை ரூ.77,811 ஆக உள்ள நிலையில் மைலேஜ் லிட்டருக்கு 70 கிமீ வரை வழங்குகின்றது.

எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Passion + DRUM BRAKE ₹ 77,841 ₹ 95,671

passion + 100 bike first look

2024 Hero HF Deluxe/HF100

இந்தியாவின் குறைந்த விலை மாடலாக உள்ள ஹீரோ மோட்டோகார்பின் HF டீலக்ஸ் மற்றும் HF 100 என இரு பைக்குகளும் ஒரே என்ஜினை ஸ்பிளெண்டர் பிளஸ் மாடலிடம் இருந்து பகிர்ந்து கொள்ளுகின்றன. இதில் HF 100 மாடல் மிக குறைவாக விலை கொண்டு டீயூப் டயர் மற்றும் கிக் ஸ்டார்டர் மட்டும் பெற்றுள்ளது.

97.2cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000rpmல் 8.02PS பவர், 6000rpmல் 8.05Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடல் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. மிக குறைந்த விலை HF 100, HF டீலக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 75 கிமீ வரை வழங்குகின்றது.

எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
HF100 Kick, DRUM BRAKE ₹ 56,818 ₹ 71,120
HF Deluxe kick, DRUM BRAKE ₹ 61,968 ₹ 75,891
HF Deluxe  DRUM Black & Accent ₹ 69,088 ₹ 86,073
HF Deluxe Self start DRUM ₹ 68,318 ₹ 85,761
HF Deluxe + i3S DRUM BRAKE ₹ 69,818 ₹ 86,961

2024 Honda Shine 100

100cc சந்தையில் கிடைக்கின்ற ஹோண்டா நிறுவன ஷைன் 100 அதிகபட்சமாக லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் வழங்கும் நிலையில் 98.98cc என்ஜின் அதிகபட்சமாக 7.28 hp குதிரைத்திறன் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.

இரு பக்கத்திலும் டிரம் பிரேக் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் 5 வித நிறங்களில் செல்ஃப் ஸ்டார்ட் பெற்றுள்ள ஹோண்டா ஷைன் 100 பைக் தமிழ்நாட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 66,600 ஆகும்.

எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Honda Shine 100 ₹ 66,600 ₹ 84,641

shine 100

2024 Bajaj Platina 100

கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் என இரு விதமாக பெற்றுள்ள பஜாஜ் ஆட்டோவின் பிளாட்டினா 100 பைக்கில் 102 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டு 7500 ஆர்பிஎம்-மில் 7.9 ஹெச்பி பவரும், 5500 ஆர்பிஎம்-மில் 8.3 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

முன்புறத்தில் டிரம் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கின்றது.

எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Bajaj Platina 100 KS ₹ 61,650 ₹ 76,683
Bajaj Platina 100 ES ₹ 69,638 ₹ 86,891

100சிசி சந்தையில் உள்ள பைக்குளின் என்ஜின் ஒப்பீடு

ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர்+ பேஷன்+, HF 100, HF டீலக்ஸ் என நான்கும் ஒரே என்ஜினை பயன்படுத்திக் கொள்ளும் நிலையில், ஷைன் 100 மற்றும் பிளாட்டினா 100 என்ஜினை ஒப்பீடலாம்.

Hero 100cc Honda Shine 100 Bajaj Platina 100
என்ஜின் 97.2cc single cyl Air cooled 98.98cc single cyl Air cooled 102cc single cyl Air cooled
பவர் 8.02 PS 7.28 hp 7.9 hp
டார்க் 8.05Nm 8.05Nm 8.3Nm
கியர்பாக்ஸ் 4 speed 4 speed 4 Speed
மைலேஜ் 70-75 kmpl 68-72 kmpl 70-75 kmpl

100cc பைக்கின் ஆன்ரோடு விலை ஒப்பீடு

இந்தியாவில் கிடைக்கின்ற 100cc பைக்குகளின் ஆன்ரோடு விலை ரூ.72,000 முதல் துவங்கி ரூ.99,000 விலைக்குள் அமைந்துள்ளது. பின்வரும் பட்டியலில் மாடல் வாரியான தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியல் உள்ளது.

100cc Bikes எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Hero Splendor+/xtech ₹ 75,591 – ₹ 79,911 ₹ 91,796 – ₹ 98,432
Hero Passion+ ₹ 77,851 ₹ 95,671
Hero HF100/Dlx ₹ 56,818 – ₹ 69,818 ₹ 71,120 – ₹ 86,961
Honda Shine 100 ₹ 66,600 ₹ 84,641
Bajaj Platina ₹ 61,650- ₹ 69,638 ₹ 76,683- ₹ 86,891

(All price Tamil Nadu)

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.