டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட உள்ள சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக மாடலான அல்ட்ரோஸ் ரேசர் காரில் 120hp பவரை வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் என்ஜின் இடம்பெற உள்ள நிலையில் டீசர் வெளியானதை தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது.
இந்தியாவில் கிடைக்கின்ற ஐ20 என்-லைன் மாடலுக்கு எதிராக களமிறங்குகின்ற இந்த காரில் ஏற்கனவே நெக்ஸான் எஸ்யூவி மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 120 hp மற்றும் 170Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த என்ஜினில் அல்ட்ரோஸ் ரேசருக்கு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெறக்கூடும்.
குறிப்பாக வெளிப்புற தோற்ற அமைப்பில் ஸ்டைலிஷான பாடி கிராபிக்ஸ் சார்ந்த வித்தியாசம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் டிசைன் பெற்றிருக்கும் இந்த மாடலில் முன்புற பானெட்டில் கருப்பு நிறத்துடன் வெள்ளை நிற கோடுகளை கொண்டுள்ளது.
இன்டிரியரில் மற்ற சாதாரண அல்ட்ரோஸ் டாப் மாடல்களில் உள்ளதை போன்ற வசதிகளை பெற்றிருந்தாலும், சில ஸ்டைலிங் மேம்பாடுகளுக்கு என சில அம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கும்.
ஜூன் மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள அல்ட்ரோஸ் ரேசர் விலை ரூ.10 லட்சத்துக்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.