பாலிகஞ்ச் பீகார் மாநிலத்தில் திடீர் என பிரசார மேடை சரிந்த நிலையில் ராகுல் காந்தி காயமின்றி தப்பி உள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி பீகார் மாநிலம் பாடலிபுத்திரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவரை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி பாலிகஞ்ச் பகுதியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பிரசாரப் பொதுக்கூட்ட மேடையில் தலைவர்கள் ஏறியபோது, பாரம் தாங்காமல் மேடையின் மையப்பகுதி […]