`போட்டியிட விருப்பமில்லை..!’ – ரிஷி சுனக் கட்சியிலிருந்து 75-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் விலகல்

இங்கிலாந்தில் வரும் ஜூலை 4-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்குப் பின் நடைபெறவிருக்கும் 3-வது பொதுத் தேர்தல் இது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு மிகுந்த 75-க்கும் மேற்பட தலைவர்கள், இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்திருக்கின்றனர்.

ரிஷி சுனக்

குறிப்பாக முன்னாள் பிரதமர் தெரசா மே, முன்னாள் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ், முன்னாள் கல்வி அமைச்சர் ராபர்ட் ஹால்ஃபோன், ரயில்வே அமைச்சர் ஹுவ் மர்ரிமேன் (Huw Merriman) வடக்கு அயர்லாந்து செயலாளர் ச்ரிஸ் ஹீடன் – ஹர்ரிஸ் (Chris Heaton-Harris), ஆண்ட்ரியா லீட்சம், நாடாளுமன்ற உறுப்பினராக நீண்டகாலமாக செயலாற்றிவரும் சிராக் மகின்லெ (Craig Mackinlay) உள்ளிட்ட பலர் அந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றனர்.

வீட்டுவசதி அமைச்சர் மைக்கேல் கோவ்,“சேவை செய்வதற்கான வாய்ப்பு அற்புதமானது. ஆனால் வெளியேற வேண்டிய நேரம் இது. ஒரு புதிய தலைமுறை வழிநடத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டு, போட்டியிட விரும்பவில்லை எனக் தெரிவித்திருக்கிறார். அதே நேரம், எதிர்க்கட்சியான லேபர் கட்சியிலிருந்தும் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிடுவதிலிருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜூன் 7-ம் தேதி வரை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட கால அவகாசம் இருக்கும் நிலையில், அடுத்தக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.