ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் உற்பத்தி செய்து வருகின்ற மாடல்களின் ஒட்டு மொத்த உற்பத்தி எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், மேட் இன் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்ற மாடல்களில் எஞ்சின் உற்பத்தி 3.80 லட்சமும் கார்களின் உற்பத்தி மூன்று லட்சத்தையும் எட்டி இருக்கின்றது.
2007 முதல் பூனே அருகில் உள்ள சக்கனில் தொடங்கப்பட்டுள்ள Skoda Auto Volkswagen India Private Limited (SAVWIPL) ஆலையில் ஸ்கோடா ஃபேபியா, ரேபிட் மட்டுமல்லாமல் ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ, ஏமியோ மாடல்களை தயாரித்து வந்தது. தற்போது இந்த இரு நிறுவனமும் இந்திய சந்தையில் MQB-A0-IN பிளாட்ஃபாரத்தில் ஸ்லாவியா, விர்டஸ், டைகன், குஷாக் மாடல்களை உற்பத்தி செய்கின்றது. 40க்கு மேற்ப்பட்ட நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற கார்களில் 30 % ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
என்ஜின் உற்பத்தியில் முதன்முறையாக போலோ காரின் 1.5-லிட்டர் TDI டீசல் எஞ்சினுடன் 2015 ஆம் ஆண்டில் உள்நாட்டில் என்ஜின் தயாரிக்கத் தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளில் 3.80 லட்சம் என்ஜின் தயாரித்துள்ளது. 2.0 லிட்டர் TDI டீசல் மற்றும் 1.0 லிட்டர் மற்றும் 1.2 MPI பெட்ரோல் என்ஜின்களும் தயாரிக்கப்பட்டன.
தற்போதைய, Skoda-VW கார்களில் 1.0 லிட்டர் TSI என்ஜினை மட்டுமே உற்பத்தி செய்கிறது. மற்ற 1.5 லிட்டர் TSI மற்றும் 2.0 லிட்டர் TSI இன்ஜின்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.