Kavya Maran ; காவ்யா மாறனை அழ வச்சு கப் அடிச்ச கேகேஆர்..! சாபம் விடும் சன்ரைசர்ஸ் ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக ஆடி கோப்பையை கைப்பற்றியது. சன்ரைசர்ஸ் அணி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியிருந்தாலும் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அந்த அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் அணி ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே தழுவியிருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, அடுத்த இரண்டு போட்டிகளிலும் தலா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றியை வசமாக்கியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 28 போட்டிகளில் 19 போட்டிகளை கொல்கத்தா அணி வென்றிருக்கிறது.

ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணியால் கொல்கத்தா அணியை வீழ்த்த முடியவில்லை. அபிஷேக் சர்மா, திரிபாதி ஆகியோர் சிறப்பாக ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோது, கொல்கத்தா அணியின் துருப்புச்சீட்டு மிட்செல் ஸ்டார்க் துல்லியமாக வேகபந்துகளை, துப்பாக்கியில் இருந்து வெளியேறும் புல்லட்டுகளைப்போல் குறிபார்த்து வீசி அவர்களை காலி செய்தார். மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வைபவ் அரோரா வீழ்த்த, சன்ரைசர்ஸ் அணியின் வீழ்ச்சி அங்கேயே தொடங்கிவிட்டது. மார்கிரம் எதிர்பார்த்தளவுக்கு பேட்டிங்கில் ஆடாமல் சொதப்ப, பந்துவீச்சில் கொல்க்கத்தா அணி கலக்க முதல் பாதியின்போதே போட்டி கேகேஆர் பக்கம் சாய்ந்துவிட்டது.

இரண்டாம் பாதி சேஸிங்கில் சம்பிரதாயத்துக்கு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கணக்கில் இறங்கி சன்ரைசர்ஸ் அணி நிர்ணயித்த 113 ரன்கள் என்ற இலக்கை 18.3 ஓவர்களில் எடுத்து வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதனையடுத்து கேகேஆர் அணி கேம்பில் கொண்டாட்டம் களைக்கட்ட, சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்களில் கண்ணீர் ததும்பி வழிந்தோடியது. அவரால் சன்ரைசர்ஸ் அணியின் தோல்வியை ஜீரணிக்கவே முடியவில்லை.  ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

(@mufaddal_vohra) May 26, 2024

கேமராவின் பார்வையில் சிக்கக்கூடாது என திரும்பி நின்று அழுதபோதும், ஒட்டுமொத்த கேமராமேன்களும் காவ்யா மாறனையே ஜூம் செய்துவிட்டனர். இருந்தபோதும் கேகேஆர் அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த காவ்யா மாறன், சன்ரைசர்ஸ் அணியையும் தட்டிக் கொடுத்து பாராட்டினார். காவ்யா மாறனின் கண்களில் கண்ணீர் வந்ததை பார்த்த அவரது ரசிகர்கள், கேகேஆர் அணி இந்த கண்ணீருக்கு அடுத்த சீசனில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என மீம்ஸ்களை பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.