17 வது ‘புத்த ரஷ்மி பக்தி கீதாவலிய’ கொழும்பு புத்த ரஷ்மி வெசாக் வலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 26) மாலை பிரபல்யமானவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
மதகுருமார்கள், ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளர் திரு. சோமரத்ன விதான பத்திரண, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஷபக்ஷ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி, மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திரு. மஹிந்த குணரத்ன, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி, ஜானகி லியனகே மற்றும் பக்தர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.
ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் பிரதம விகாராதிபதி (கலாநிதி) கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் அவர்களின் வருகையுடன் நிகழ்வு ஆரம்பமானது. பக்தி பாடல்கள், இசை மற்றும் இசை நாடகங்கள் அடங்கிய நிகழ்ச்சிகள் சிறிது நேரத்திற்குப் பின் ஆரம்பமாகின.
இந்நிகழ்வின் போது புத்த ரஷ்மி வெசாக் கூடு போட்டியில் பங்குபற்றிய 26 பாடசாலைகளுக்கும் சம்பத் வங்கி அதிகாரிகள் சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன், முதல் மூன்று இடங்களுக்கான பண பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை ஜனாதிபதி செயலக அதிகாரிகள் வழங்கி வைத்தனர். மேலும், திறந்த பிரிவில் 4ம் இடம் முதல் 10ம் இடம் பெற்றவர்களுக்கான ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதி செயலக அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
பின்னர், புத்த ரஷ்மி வெசாக் கூடு போட்டியின் திறந்த பிரிவில் முதல் மூன்று இடங்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் பண பரிசில்களை வழங்குவதற்காக இராணுவத் தளபதி உட்பட அழைப்பாளர்கள் குழுவினர் அழைக்கப்பட்டனர். இலங்கை பீரங்கிப் படையணி மூன்றாவது இடத்தையும், இலங்கை கவச வாகன படையணி திறந்த பிரிவில் 6வது இடத்தையும் பெற்றது.