கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் என்டிரியான இந்த ஆண்டே அந்த அணி ஐபிஎல் 2024 தொடரில் வாகை சூடி அசத்தியிருக்கிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஷாரூக்கான், கம்பீர் இனி கேகேஆர் அணியை விட்டு போக்ககூடாது என்பதில் இன்னும் உறுதியான அன்பு கட்டளை இட்டுவிட்டாராம். அவர் அடுத்த 10 ஆண்டுக்கு கேகேஆர் அணியுடன் இருக்க வேண்டும் என சொல்லிவிட்ட அவர், அதற்காக பிளாங் செக் ஒன்றையும் கம்பீரிடம் கொடுத்துவிட்டாராம். இப்படியான அன்பு கட்டளையை மீறி எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் அவர், கொல்கத்தா அணிக்குள் மீண்டும் வந்தது எப்படி? என்ற தகவல் இப்போது வெளியாகியிள்ளது.
லக்னோ அணியின் ஆலோசகர்
கவுதம் கம்பீர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் என்ட்ரியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவரது ஆலோசனையின் கீழ் லக்னோ அணி ஐபிஎல் தொடருக்குள் வந்த முதல் இரண்டு ஆண்டுகளிலும் அடுத்தடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. ஆனால் இந்த அண்டு கம்பீர் அந்த அணியில் இருந்து வெளியேறி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைந்துவிட்ட நிலையில், லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கூட முன்னேறவில்லை. கேகேஆர் சாம்பியன் பட்டத்தையே அடித்து அசத்திவிட்டது. அவரை வலுக்கட்டாயமாக கேகேஆர் அணிக்கு ஷாருக்கான் அழைத்து வந்த விஷயம் இப்போது வெளியாகியிருக்கிறது.
ஷாருக்கான் வீட்டில் மீட்டிங்
கவுதம் கம்பீர் தலைமையில் கேகேஆர் அணி 2012 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அவர் அந்த அணியில் இருந்து வெளியேறிய பிறகு ஒரு ஐபிஎல் கோப்பை கூட கேகேஆர் அணி அடிக்கவில்லை. இதனால் கம்பீரை கேகேஆர் அணிக்குள் கொண்டு வர 2018 ஆம் ஆண்டு முதல் ஷாருக்கான் முயற்சித்திருக்கிறார். இருப்பினும் ஏதோ சில காரணங்களால் கம்பீர் கேகேஆர் அணியுடன் இணையவில்லை. ஆனால், லக்னோ அணியின் ஆலோசகராக கம்பீர் வந்த பிறகு மீண்டும் ஷாருக்கான் தன்னுடைய ’மனத்’ வீட்டிற்கு அவரை அழைத்திருக்கிறார்.
கம்பீருக்கு காத்திருந்த ஆஃபர்
அதன்பேரில் அங்கு சென்ற கம்பீரிடம், ஷாருக்கான் மீண்டும் கேகேஆர் அணியுடன் இணைய வேண்டும் என தெரிவித்திருக்கிறார். அதற்கு கம்பீர் பதில் சொல்வதற்கு முன்பே பிளாங் செக் ஒன்றை எடுத்து வைத்துவிட்ட ஷாருக்கான், அடுத்த 10 ஆண்டுகளுக்கு உங்களுக்கு என்ன தொகை வேண்டும் என நினைக்கிறீர்களோ அதனை நிரப்பிக் கொள்ளுங்கள். ஆனால் இந்த ஆண்டு முதல் கேகேஆர் அணியுடன் நீங்கள் இருந்தே ஆக வேண்டும் என திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இந்த கட்டளை மீற முடியாமல் ஓகே சொல்லிவிட்டு வெளியே வந்த கம்பீர், லக்னோ அணிக்கு இந்த தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த அணியின் உரிமையாளர் கோயங்கா கம்பீரை மறுப்பு சொல்ல சொல்லியிருக்கிறார். இருப்பினும் கம்பீர் ஷாருக்கான் பக்கமே சாய்ந்துவிட்டார்.
கம்பீரை எதிர்பார்க்கும் பிசிசிஐ
இந்த சூழலில் இந்திய அணியின்அடுத்த பயிற்சியாளர் தேர்வு மும்முரமாக போய் கொண்டிருக்கிறது. கம்பீர் இதற்கு விருப்பமாக இருக்கிறார். பிசிசிஐ அவர் விண்ணப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பளிக்கவும் தயாராக இருக்கிறது. ஆனால் கேகேஆர் ஓனர் ஷாருக்கான் தன்னுடைய அணியை விட்டு செல்லும் எண்ணம் வரவே கூடாது என மீண்டும் கம்பீரிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம். இதனால், இந்திய அணியின் பயிற்சியாளராக்க கம்பீரை சமாதானப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என பிசிசிஐ ஆலோசித்து வருகிறதாம்.