நடப்பு 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் சிட்ரோன் (Citroen) நிறுவனம் பாசால்ட் கூபே எஸ்யூவி, C3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் மற்றும் 6 ஏர்பேக்குகள் கொண்ட C3, eC3 மற்றும் C3 ஏர்கிராஸ் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முன்பே சிட்ரோன் வெளியிட்டிருந்த அறிக்கையின் படி, ஜூன் அல்லது ஜூலை மாதம் தற்பொழுது சந்தையில் உள்ள மாடல்களில் அடிப்படையாக இரண்டு ஏர்பேக்குகள் பெற்றுள்ள வேரியண்ட்டுகள் மட்டும் கிடைத்து வருகின்றது. பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தற்பொழுது 6 ஏர்பேக்குகள், இருக்கை பெல்ட் உள்ளிட்ட அமைப்புடன் ESC ஆகியவற்றை பெற்றிருக்கின்ற நிலையில், போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த உள்ளது.
Citroen Basalt
சிட்ரோன் நிறுவனத்தின் கூபே ஸ்டைல் பெற்ற பாசால்ட் எஸ்யூவி காரின் தோற்றம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு வரவுள்ள டாடா கர்வ் உள்ளிட்ட பல்வேறு நடுத்தர எஸ்யூவி மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகளை பெற உள்ள இந்த காரில் 110 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் வரவுள்ள மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் என இரண்டு விதமான ஆப்ஷன் பெற்றிருக்கும்.
வரும் மாதங்களில் விலை அறிவிக்கப்பட்டு பண்டிகை காலத்துக்கு முன்பாக டெலிவரி வழங்கப்பட உள்ளது. எனவே, புதிய சிட்ரோன் பாசால்ட் எஸ்யூவி விலை ரூ.12 லட்சத்துக்கும் கூடுதலாக துவங்கலாம்.
Citroen eC3 Aircross
விற்பனையில் உள்ள 5+2 இருக்கை பெற்ற C3 ஏர்கிராஸ் எஸ்யூவி அடிப்படையில் உள்ள மாடலில் கூடுதலாக எலக்ட்ரிக் காராக விற்பனைக்கு வெளியிடப்படலாம். சந்தையில் தற்பொழுது ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என இரு ஆப்ஷனை பெற்றதாக விற்பனைக்கு கிடைக்கின்றது.
ஏற்கனவே சிட்ரோன் அறிவித்தபடி, சி3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு சுமார் 400-600 கிமீ ரேஞ்ச் வழங்கும் வகையில் வெளியிடப்படலாம்.
சிட்ரோன் நிறுவனத்தின் தலைமையகமான ஸ்டெல்லண்டிஸ் குழுமம் சமீபத்தில் லீப்மோட்டார் உடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இரண்டு எலக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க – சிட்ரோன் C3 ஏர்கிராஸ் விலை மற்றும் சிறப்புகள்