நீங்க நினைக்கிற மாதிரி யுபிஐ -ல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது! லிமிட் வந்துருச்சு

UPI செயலி இருந்தால்போதும் கையில் பணம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு பெரிய கட்டணங்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில் நீங்கள் கட்டிவிடலாம். ஆனால், வங்கிகளுக்கு பணப்பரிவர்த்தனைக்கு லிமிட் இருப்பதைபோல ஒருநாளைக்கு எவ்வளவு பணம் பரிவர்த்தனை செய்யலாம், ஏதேனும் லிமிட் இருக்கிறதா? என்ற தகவல் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. இப்போது யுபிஐ தினசரி பிரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, சாதாரண UPIக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் காப்பீடு, மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்கு UPI பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு இந்த வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐபிஓ (இனிஷியல் பப்ளிக் ஆஃபர்) மற்றும் சில்லறை நேரடித் திட்டத்திற்கான யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக வைக்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான UPI வரம்பு

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, டிசம்பர் 8, 2023 முதல், குறிப்பிட்ட துறைகளுக்கான UPI பரிவர்த்தனைகளின் வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு UPI செலுத்துவதற்கான வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கு முன், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு UPI செலுத்துவதற்கான வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது.

நபருக்கு நபர் UPI பரிவர்த்தனை

P2P UPI பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு வங்கியும் அதன் சொந்த நிபந்தனைகளை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, HDFC வங்கி P2P (நபர் முதல் நபர்) மற்றும் P2M (நபர் முதல் வணிகர் வரை) UPI பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1 லட்சம் அல்லது 20 பரிவர்த்தனைகளுக்கு வரம்பை நிர்ணயித்துள்ளது. இந்த வரம்பு 24 மணிநேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விதிகளின்படி, தினமும் 20 UPI பரிவர்த்தனைகளைச் செய்யலாம். இதற்குப் பிறகு, பரிவர்த்தனையைத் தொடங்க வாடிக்கையாளர் 24 மணிநேரம் காத்திருக்க வேண்டும். மூன்றாம் தரப்பு UPI பயன்பாடுகளுக்கு 10 பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.