காதலி வேண்டுமா அல்லது நான் வேண்டுமா என்று மனைவி நிபந்தனை விதித்ததை அடுத்து காதலியை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரின் ஃபலாசியா காவல் நிலையப் பகுதியில் உள்ள காட்டில் கடந்த மாதம் ஒரு பெண் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக விசாரித்து வந்த காவல்துறையினர் 39 நாட்களுக்குப் பிறகு இதில் தொடர்புடைய தேவிலால் என்ற நபரை கைது செய்துள்ளனர். செமரி மாவட்டம், தங்கவாடா காவல் நிலையத்தில் […]
