Airtel vs Jio Annual Recharge Plan: தொலைத்தொடர்பு துறையில் ஜியோவும், ஏர்டெலும் இந்தியாவில் முன்னணி வகித்து வருகின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு நிறுவனங்களையே பயன்படுத்துகின்றனர். வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் மட்டுமே 5ஜி இணைய சேவையை இந்தியா முழுவதும் வழங்கி வருகிறது. அதுவும் வரம்பற்ற வகையில் இலவசமாக வழங்கி வருவதால் வாடிக்கையாளர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் விரைவிலேயே இந்த 5ஜி சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என்பதால் இருக்கும் வரை அனுபவித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் பயனர்கள் உள்ளனர். 5ஜி இணைய சேவையின் வருகையால், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 5ஜி மொபைல்களின் வருகையும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சிலர் மாதாந்திர ரீசார்ஜ் பிளானுக்கு பதில் வருடாந்திர பிளானை தேர்வு செய்யும் நோக்கில் உள்ளனர். இந்த வருடாந்திர பிளானில் டேட்டா பயன்கள் அதிகமாக கிடைக்கும் என்பதாலும் இலவச ஓடிடி சேவைகளையும் இந்நிறுவனங்கள் வழங்குகின்றன என்பதால் நீண்டகால லாபம் சார்ந்து இதனை ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர்கள் நினைக்கின்றனர். இந்நிலையில், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களில் வழங்கப்படும் வருடாந்திர பிளான்கள் குறித்தும், அதன் அம்சங்கள் குறித்தும் விரிவாக காணலாம்.
ஏர்டெல் வருடாந்திர மொபைல் ரீசார்ஜ் திட்டம்
ரூ.1,799 ரீசார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தில் மொத்தமே 24ஜிபி டேட்டா தான் கிடைக்கும். அதாவது வருடத்திற்கு 24ஜிபி என்பதை நினைவில் கொள்ளவும். இதில் இந்தியாவுக்குள் பேச வரம்பற்ற காலிங் வசதி கிடைக்கிறது. வருடத்திற்கு 3600 எஸ்எம்எஸ்கள் இலவசமாகும். இதில் அப்பல்லோ 24|7 சர்கிளின் மூன்று மாத இலவச அணுகல் கிடைக்கும். FreeHelloTunes, Wynk Music ஆகிய வசதிகளையும் நீங்கள் பெறுவீர்கள்.
ரூ.2,999 ரீசார்ஜ் திட்டம்
தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு மொத்தம் 730ஜிபி ஆகும். இந்தியா முழுவதும் வரம்பற்ற காலிங் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாகும். அதேபோல், அப்பல்லோ 24|7 சர்கிளின் மூன்று மாத இலவச அணுகல் கிடைக்கும். FreeHelloTunes, Wynk Music ஆகிய வசதிகளையும் நீங்கள் பெறுவீர்கள்.
ரூ. 3,359 ரீசார்ஜ் திட்டம்
இதில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். வருடத்திற்கு மொத்தம் 912.5ஜிபி ஆகும். இந்தியாவுக்கு வரம்பற்ற காலிங் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாகும். ஒரு வருடத்திற்கு டிஎஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியின் இலவச அணுகல் கிடைக்கிறது. மேலும், அப்பல்லோ 24|7 சர்கிளின் மூன்று மாத இலவச அணுகல் கிடைக்கும். FreeHelloTunes, Wynk Music ஆகிய வசதிகளையும் நீங்கள் பெறுவீர்கள்.
ஜியோ வருடாந்திர மொபைல் ரீசார்ஜ் திட்டம்
ரூ.3,227 ரீசார்ஜ் திட்டம்
இதில் தினமும் 2ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். ஒரு வருடத்திற்கு மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். மேலும், அமேசான் பிரைம் வீடியோ (மொபைல்) ஓடிடியின் அணுகல் ஒரு வருடத்திற்கு இலவசம். இதில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகிய வசதிகளும் கிடைக்கும்.
ரூ.3,333 ரீசார்ஜ் திட்டம்
இதில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கிறது. வருடத்திற்கு 912.5ஜிபி கிடைக்கும். வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாகும். இதில் ஜியோ டிவியின் மூலம் Fancode ஓடிடியை நீங்கள் ஒரு வருட காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் வசதியும் இதில் கிடைக்கும்.
ரூ.2,999 ரீசார்ஜ் திட்டம்
இதில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கிறது. மொத்தம் 912.5ஜிபி டேட்டா வருடம் முழுவதும் கிடைக்கும். வரம்பற்ற காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம் ஆகும். இதில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் வசதியும் கிடைக்கும்.
மேலும் படிக்க | குஷியில் Vi வாடிக்கையாளர்கள்… 130ஜிபி கூடுதல் டேட்டா இலவசம் – ஆனால் ஒரு ட்விஸ்ட் இருக்கு!