புனேயில் கடந்த வாரம் 17 வயது சிறுவன் அதிகாலையில் மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். அச்சிறுவன் தற்போது சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மது போதையில் இருந்தபோது ரத்த பரிசோதனை செய்யப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் அவனை கைதுசெய்த போலீஸார் பல மணி நேரம் கழித்துத்தான் சிறுவனை மருத்துவப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், அங்கு சிறுவனின் ரத்த மாதிரியை டாக்டர்கள் அஜய் மற்றும் ஹரி ஆகியோர் மாற்றி மோசடி செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. தடயவியல் பிரிவு தலைவரான டாக்டர் அஜய் சொல்லி டாக்டர் ஹரி சிறுவனின் ரத்த மாதிரியை எடுத்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, வேறு ஒருவரின் ரத்த மாதிரியை எடுத்து அதனை சோதனை செய்து அறிக்கையாக அனுப்பினார்.
இதற்காக இரு டாக்டர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் சிறுவனின் தந்தை அகர்வால், டாக்டர் அஜய்யிடம் போனில் பேசி லஞ்சம் தருவதாகச் சொல்லி இக்காரியத்தில் ஈடுபட வைத்துள்ளார். போலீஸாரின் விசாரணையில் ரத்த மாதிரி எடுக்கப்பட்ட சசூன் மருத்துவமனையில் பியூனாக பணியாற்றிய அதுல் என்பவரைத்தான் டாக்டர்கள் இருவரும் பில்டர் அகர்வாலிடம் சென்று லஞ்ச பணத்தை வாங்கி வரும்படி தெரிவித்துள்ளனர். அதுல், பில்டர் அகர்வாலிடம் சென்று ரூபாய் 3 லட்சத்தை வாங்கி வந்துள்ளார்.
இதையடுத்து அவரையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். சிறுவனின் ரத்த பரிசோதனை அறிக்கையில் மது அருந்தவில்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் சிறுவன் பாரில் மது அருந்துவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கைது செய்யப்பட்ட டாக்டரிடம் விசாரித்தபோது, “நான் அமைதியாக இருக்கமாட்டேன். இதில் தொடர்புடைய அனைவரது பெயரையும் சொல்வேன்” என்று மிரட்டி இருக்கிறார். இதற்கிடையே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பப் உரிமையாளர் உட்பட 4 பேர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb