Automobile News In Tamil: கார் வாங்குவது என்பது அனைவருக்குமே ஒரு பெரிய கனவாகும். இருப்பினும் சிலருக்கு கார் என்றாலே பைத்தியமாக இருப்பார்கள். கார் ஓட்டுவது அவர்களுக்கு வானில் பறப்பது போன்று. சிறுவயதில் இருந்தே கார்களை ரசித்து அவர்கள் வளர்ந்திருப்பார்கள். அதனை ஓட்டுவதில் கிடைக்கும் குதூகலம் அவர்களுக்கு எவ்வளவு வயதானாலும் போகவே போகாது எனலாம்.
அப்படியானவர்கள் மிகவும் சக்திவாய்ந்த, அதிக பவருடன் இயங்கும் கார்களை வாங்க நினைப்பார்கள். அது பெட்ரோல் எஞ்ஜின், டீசல் எஞ்ஜினோ, எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட காரோ அதிக பவருடன் இயங்கும் பார்த்தாலே இவர்கள் பரவசம் ஆகிவிடுவார்கள். அந்த வகையில், தற்போது அதிக பவருடன் கிடைக்கும் சக்திவாய்ந்த ஐந்து கார்கள் குறித்தும், அவற்றின் விலை குறித்தும் இதில் காணலாம்.
Mahindra Scorpio N 2.0 Turbo (Petrol)
இந்த கார் 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் கொண்டுள்ளது. குறிப்பாக, Mahindra XUV700 போன்று இருக்கும். ஆனால், இது கூடுதலாக 3hp பவரை உற்பத்தி செய்கிறது. 203hp வெளியீடுடன் வருவதால் இந்த கார் சக்திவாய்ந்த SUV மாடலில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இதில் 6-ஸ்பீடு மேனுவர் கியர் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட இரண்டும் ஆப்ஷனும் உள்ளது. இந்த காரின் விலை ரூ.13.85 லட்சத்தில் இருந்து ரூ.21.98 லட்சம் வரை செல்கிறது.
MG ZS (EV)
இந்த காரில் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் அமைப்பு உள்ளது. மேலும் இது 177hp பவர் மற்றும் 280Nm உச்ச முறுக்குவிசையை உற்பத்தி செய்கிறது. 50.3kWh பேட்டரி மூலம் இந்த கார் இயக்கப்படுகிறது. மேலும், இதன் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 461கி.மீ., வரை செல்லலாம். இந்த கார் ரூ.18.98 லட்சம் முதல் ரூ.25.20 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Tata Harrier 2.0 (Diesel)
ஐந்து இருக்கைகள் கொண்ட இந்த TATA கார் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் உடன் வருகிறது. இது 170hp பவர் மற்றும் 350Nm உச்ச முறுக்குவிசையை உற்பத்தி செய்கிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கன்வர்ட்டர் கியர் ஆகிய அம்சத்துடன் வருகிறது. இந்த கார் ரூ.15.49 லட்சம் முதல் ரூ.26.44 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Jeep Compass 2.0 (Diesel)
இந்தியாவில் இந்த கார் 2.0-லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் எஞ்ஜினுடன் வருகிறது. இது 170hp பவரையும் மற்றும் 350Nm உச்ச முறுக்குவிசையையும் உற்பத்தி செய்கிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வரும். மேலும், 9-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியரை ஆப்ஷனலாக பெறலாம். இந்த காரின் விலை ரூ.20.69 லட்சத்தில் இருந்து ரூ.32.41 லட்சம் வரை இருக்கும்.
MG Hector 2.0 (Diesel)
MG நிறுவனத்தின் இந்த காரும் 2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் எஞ்ஜின் உடன் வருகிறது. இதுவும் 170hp பவரையும் மற்றும் 350Nm உச்ச முறுக்குவிசையையும் உற்பத்தி செய்கிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் கியருடன் மட்டுமே வருகிறது, ஆட்டோமெட்டிக் இதில் இல்லை. இந்த காரின் விலை ரூ.17.70 லட்சம் முதல் 21.90 லட்சம் வரை வருகிறது.