முந்தைய XUV300 மாடலுக்கு மாற்றாக வந்த புதிய XUV 3XO அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் முதல் நாளே 1,500 டெலிவரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த மாடலுக்கான காத்திருப்பு காலம், அதிகப்படியான வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்ற வேரியண்ட் மற்றும் மாதந்தோறும் மஹிந்திரா உற்பத்தி செய்கின்ற எண்ணிக்கை விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
முதல் ஒரு மணி நேரத்தில் 50,000 முன்பதிவுகளை பெற்றதாக வெளியிடப்பட்ட மஹிந்திரா அறிக்கையை தொடர்ந்து தற்பொழுது வரை முன்பதிவு எவ்வளவு பெற்றிருக்கின்றது என்ற விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மே 26 முதல் டெலிவரி துவங்கப்பட்ட நிலையில் முதல் நாளில் 1,500 கார்களை நாடு முழுவதும் டெலிவரி வழங்கியுள்ளது.
மஹிந்திராவின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ உற்பத்தி எண்ணிக்கை மாதந்தோறும் 9,000 யூனிட்டுகளாக உள்ள நிலையில் 50,000த்திற்கும் கூடுதலாக முன்பதிவு பெற்றுள்ளதாலும், ஏற்கனவே 10,000 யூனிட்டுகளை தயாரித்துள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் காத்திருப்பு காலம் 3 முதல் 6 மாதங்கள் வரை வேரியண்ட் மற்றும் டீலர்களை பொறுத்து மாறுபடுகின்றது. குறிப்பாக வெள்ளை மற்றும் நீலம் என இரு நிறங்களும் அமோக ஆதரவினை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் என மூன்று விதமான ஆப்ஷனில் 6 வேக மேனுவல், ஆட்டோமேட்டிக் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என மாறுபட்ட வகைகளில் கிடைக்கின்றது. மஹிந்திராவின் XUV3XO ஆன்ரோடு விலை ரூ.9.01 லட்சம் முதல் துவங்குகின்றது.
மேலும் படிக்க- எக்ஸ்யூவி 3XO சிறப்புகள் மற்றும் வேரியண்ட் வாரியான ஆன்ரோடு விலை
இந்திய சந்தையில் கிடைக்கின்ற நெக்ஸான், வெனியூ, சொனெட், கிகர், மேக்னைட், பிரெஸ்ஸா, டைசோர், மற்றும் ஃபிரான்க்ஸ் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.