இடம்பெறும் நேர்முகப் பரீட்சையில் நேர்முகப் பரீட்சைக் குழு முன்னிலையில் உயரம், நெஞ்சு அளக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டதுடன். பின்னர் சான்றிதழ்கள் பரீட்சிக்கப்படுவதாகவும், சுற்றுநிருபங்ளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள படி விளையாட்டுத் திறமைகளுக்காக அங்கு புள்ளிகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் விபரித்தார்.
அப்பரீட்சைகளில் பெறப்படும் புள்ளிகளை மீண்டும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பிய பின்னர் அப்புள்ளிகள் மற்றும் எழுத்துப் பரீட்சையில் பெற்ற புள்ளிகளுடன் சேர்த்து அதனை இரண்டாகப் பிரித்துக் கிடைக்கப் பெறும் புள்ளிகளின் படி முன்னுரிமை அடிப்படையில் தயாரிக்கப்படும் பட்டியல் அச்சுங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் நிறுவனத்திற்குள் நுழைவதற்கு நாட்டில் படித்த இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள முறைக்கு அப்பால் செல்லாது, வெளிப்படைத் தன்மையுடன் முன்மாதிரியான முறையில் இச்செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் இவ்வாறு பொறுப்புடன் அறிவிப்பதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய மேலும் வலியுறுத்தினார்.