அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் காணப்படும் பொருளாதார சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குவதே என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (28)இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தோட்டத் தொழிற்சங்கங்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் ஆகியோரின் கருத்துக்களையும் அரசாங்கத்தின் சம்பள அதிகரிப்பு ஒழுங்குவிதிகளுடன் பிணைத்து செயற்படுத்தும் நிலை தொடர்பாக சரள ஆய்வொன்றை மேற்கொண்ட, அறிக்கையொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்காக மே மாதத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி வர்த்தமானி அறிவித்தலில் சம்பள அதிகரிப்பு ஜனாதிபதியினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறே சம்பளத்தை வழங்க முடியாதுவிடின் அவ்வியலாமை தொடர்பாக ஆராய்வதற்கு இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குழு அறிக்கை கிடைத்த பின்னர் இது பற்றிய நிரந்தரத் தீர்வொன்றை வெளியிட முடியுமென்றும் அமைச்சர் மேலும் விபரித்தார்.