பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சபலென்கா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரிஸ்,

பாரீஸ், பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் தகுதிச்சுற்று முடிந்து தற்போது முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை எரிகா ஆன்ட்ரிவா மோதினார்.இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.