டாடாவின் நெக்ஸானை விட XUV 3XO எஸ்யூவியில் உள்ள சிறந்த வசதிகள்

4 மீட்டர் எஸ்யூவி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள புதிய மஹிந்திரா XUV 3XO காருக்கு போட்டியாகவும் இந்தியாவின் முன்னணி எஸ்யூவி மாடலாக நான்கு மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள சந்தையில் விளங்குகின்ற டாடா நெக்ஸான் காரை விட கூடுதலாக இந்த மாடல் பெற்றுள்ள வசதிகளின் விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாதம் தோறும் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான நெக்ஸான் கார்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் இந்த மாடலுக்கு மிக ஒரு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையில் புதிதாக XUV 3XO ஆனது விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, முந்தைய xuv300 மாடலைவிட முற்றிலும் மேம்படுத்தப்பட்டு ஒரு நவீனத்துவமான ஸ்டைலிங்கை பெற்று அதிநவீன வசதிகளும் பாதுகாப்பிலும் மேம்படுத்தப்பட்டுள்ளதால் காரின் மீதான கவனம் அதிகரித்துள்ளது.

மேலும், குறைந்த நேரத்தில் அதாவது ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் கூடுதலான முன்பதிவுகளைப் பெற்று இருப்பதாக இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. மேலும் டெலிவரி தொடங்கப்பட்ட இரண்டு நாட்களில் தற்பொழுது வரை 2500க்கும் மேற்பட்ட டெலிவரி வழங்கப்பட்டுள்ளது.

Level 2 ADAS

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் அடிப்படையாகவே அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை பொதுவாக இரு மாடல்களும் பெற்றிருக்கின்றன.

ஆனால் இவற்றை விட மேம்பட்ட லெவல் 2 அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்பினை (ADAS- Advanced Driver Assistance Systems) XUV 3XO பெறுகின்றது. இதன் மூலம் லேன் கீப் அசிஸ்ட், லேன் மாறும் பொழுது எச்சரிக்கை, ஹை பீம் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் அவசரகால பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது.

பெரிய சன்ரூஃப்

ஒற்றை பேன் சன்ரூஃப் பெற்றுள்ள நெக்ஸானை விட பெரிய டூயல் பேன் பனரோமிக் சன்ரூஃப் ஆனது எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ பெறுகின்றது. ஒவ்வொருவருக்கு தனித்தனியான விருப்பமான டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் பெற்றுள்ளது. இதன் மூலம் சிறப்பான ஏசி வசதியை பெறு முடியும், ஆனால் நெக்ஸானில் சிங்கிள் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி மட்டும் உள்ளது.

டிஸ்க் பிரேக்குகள்

நெக்ஸானில் பின்புற டயர்களுக்கு டிரம் பிரேக் மட்டும் வழங்கப்படுகின்ற நிலையில், மஹிந்திராவின் XUV 3XO காரில் பின்புறத்திலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் இரு மாடல்களும் டிஸ்க் பிரேக் உள்ளது.

எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

மெக்கானிக்கல் ஹேண்ட் பிரேக் பெறுகின்ற நெக்ஸானை விட எக்ஸ்யூவி 3 எக்ஸ்ஓ டாப் வேரியண்டுகளில் ஆட்டோ ஹோல்ட் வசதியுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்கைப் பெறுகிறது, இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மிக எளிமையாக கையாளுவதற்கு உதவுகின்றது.

 

மற்ற வசதிகள்

17 அங்குல அலாய் வீல் பெற்றுள்ள XUV 3X0 காரில் ஸ்டீயரிங் மோடு வசதி மூலம் நகரம் மற்றும் நெடுஞ்சாலை என இரண்டுக்கும் ஏற்ற வகையில் ஸ்டீயரிங் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள முடியும்.

சிட்டி டிரைவிங் போது இலகுவான மற்றும் எளிமையாக ஸ்டீயரிங் கையாளுவதற்கு ஏற்ற முறையிலும், அல்லது நெடுஞ்சாலை பயணத்திற்கான க்ரூஸிங் அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

XUV3X0 மாடலில் இல்லாத சில வசதிகளை டாடா நெக்ஸான் கூடுதலாக சிலவற்றை பெறுகின்றன. அவற்றில் மிக முக்கியமானது வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, வீடியோ ஸ்டீரிமிங் ஆப் செயல்பாடு, காற்றோட்டமான இருக்கை, மற்றும் கார்னரிங் விளக்குகள் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

Mahindra XUV 3XO vs Tata Nexon Price

மஹிந்திராவின் XUV3X0 மற்றும் டாடா நெக்ஸான் என இரு மாடலுக்கு உள்ள தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை வித்தியசாத்தை அறிந்து கொள்ளலாம். குறிப்பாக நெக்ஸான் 78க்கு மேற்பட்ட வேரியண்டுகளை கொண்டுள்ளது.

Sub 4M SUV எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Mahindra XUV 3XO ₹ 7.49 லட்சம் – ₹.14.99 லட்சம் ₹ 9.01 லட்சம் – ₹ 18.75 லட்சம்
Tata Nexon ₹ 8.00 லட்சம் –  ₹ 15.80 லட்சம் ₹ 9.61 லட்சம் – ₹ 19.74 லட்சம்

mahindra xuv3xo rear

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.