டெல்லி: “மோடியை விஷ்ணுவின் 11வது அவதாரமாக காட்ட பாஜக முயற்சி” செய்து வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டி உள்ளார். 18வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்டமான 7வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (ஜூன் 1ந்தேதி) நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆட்சி தக்க வைத்துக்கொள்ள […]