ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 சிறப்பு மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. என்ஜின் உட்பட மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை.
விற்பனையில் கிடைக்கின்ற XTEC மாடலை விட ரூபாய் 3000 வரை கூடுதலாக அமைந்திருந்தாலும் அதற்கேற்ற வசதிகளை இந்நிறுவனம் கொடுத்திருக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சந்தையில் மிகவும் நம்பகமான 100சிசி Commuter செக்மெண்ட் மாடலாக விளங்குகின்ற ஸ்பிளெண்டர் பிளஸ் ஆனது 4 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
ஐ3எஸ் நுட்பத்துடன் கூடிய 97.2cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000rpmல் 8.02 PS பவர், 6000rpmல் 8.05Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடல் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிளெண்டரின் மைலேஜ் லிட்டருக்கு 73 கிமீ வரை வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.
புதிய மாடலில் எல்இடி ஹெட்லைட் ஆனது ஹை இன்டென்சிட்டி பொசிஷன் லேம்ப் (High Intensity Position Lamp – HIPL ) தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான H-வடிவ சிக்னேச்சர் டெயில் லேம்ப் மற்றும் மாறுபட்ட டர்ன் இன்டிகேட்டர் கொண்டுள்ளது.
குறிப்பாக புதிய டூயல் நிறத்திலான மேட் கிரே, கருப்பு மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை பெறுகின்ற மாடலில் முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெறுகின்ற ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் வேரியண்டில் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட், நிகழ் நேர மைலேஜ் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
ஹீரோவின் புதிய Splendor+ XTEC 2.0 ரூ.82,911 (எக்ஸ்-ஷோரூம், தமிழ்நாடு) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.