Amazon Prime Video Free Subscription : பிரபலமான OTT சேவையான Amazon Prime-ல் நிறைய திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் டாக்குமென்ட்ரிகள் வெளியிடப்படுகின்றன. இவற்றில் பல நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த தொடர்களை எல்லாம் நீங்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் தனியாக பணம் கட்டி பார்க்க வேண்டும். அப்படி தனியாக பணம் கட்டி பார்க்க விரும்பவில்லை என்றால், ஒரு ஸ்பெஷல் டிரிக்ஸ் இருக்கிறது. உங்கள் ரீச்சார்ஜ் உடன் சேர்த்து அமேசான் பிரைம் ஓடிடி கிடைகும் பிளானை தேர்ந்தெடுத்துவிட்டால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததபோல், இரண்டு சேவைகளையும் ஒன்றாக பெறலாம். இதற்கான பிரத்யேக பிளான்களை ஜியோ மற்றும் ஏர்டெல் கொண்டிருக்கும் நிலையில், இரண்டு நிறுவனங்களில் உள்ள அமேசான் ஓடிடி பிளான்கள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
ஏர்டெல்லின் இலவச பிரைம் வீடியோ பிளான்கள்
ரூ. 699- ஏர்டெல்லின் இந்த ரீசார்ஜ் திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. 3ஜிபி தினசரி டேட்டாவின் பலன் கிடைப்பதுடன் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் நன்மைகளும் கூடுதலாக கிடைக்கும். இதுதவிர இந்த பிளானில் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்களை பெறலாம். அத்துடன் பிரைம் வீடியோ சந்தா இந்த பிளானில் உள்ளது.
ரூ.999- அமேசான் பிரைம் சந்தாவை வழங்கும் ஏர்டெல்லின் இந்த ரீசார்ஜ் திட்டம் ரூ.999க்கு 84 நாட்கள் வேலிடிட்டியுடன் உள்ளது. இது ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், பிற தேர்ந்தெடுக்கப்பட்ட நன்மைகளும் உண்டு வழங்குகிறது. ஏர்டெல்லின் இரண்டு திட்டங்களும் வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்குகின்றன.
ரிலையன்ஸ் ஜியோவின் இலவச அமேசான் பிரைம் திட்டம்
ரூ.857- அமேசான் பிரைம் சந்தாவை வழங்கும் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம் ரூ.857. இது 84 நாட்கள் செல்லுபடியாகும். தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்புகளுடன் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தில் ஜியோ செயலிகளுக்கான சப்ஸ்கிரிப்சனும் கிடைக்கிறது.
ரூ.1,198- ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் 84 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் முந்தைய திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் பெறுகிறார்கள். இருப்பினும், JioTV பிரீமியம் திட்டமாக இருப்பதால், இது Amazon Prime தவிர மொத்தம் 15 OTT சேவைகளுக்கான சந்தாவுடன் வருகிறது.
ரூ. 3,227 – இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முழு ஒரு வருட செல்லுபடியாகும், ஜியோ தினசரி 2 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு விருப்பத்தை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தாவின் பலனை வழங்குகிறது.
ரூ.4,498- அமேசான் பிரைம் சந்தாவை வழங்கும் ஜியோவின் மிகவும் விலையுயர்ந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ.4,498. இந்தத் திட்டம் Amazon Prime மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் 14 OTT சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் முந்தைய திட்டத்தைப் போலவே பலன்களை வழங்குகிறது.
வோடபோன்-ஐடியாவின் இலவச பிரைம் வீடியோ திட்டம் (Vi)
ரூ. 3,199 – Vi பயனர்கள் இலவச அமேசான் பிரைம் அணுகலைப் பெறும் ஒரே திட்டம், இது 365 நாட்கள் செல்லுபடியாகும். தினசரி 2ஜிபி டேட்டா தவிர, வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 50ஜிபி கூடுதல் டேட்டா போன்ற பலன்கள் கிடைக்கும்.
அதனால், அமேசான் பிரைம் வீடியோ சப்ஸ்கிரிப்சன் வேண்டும் என நினைக்கும் வாடிக்கையாளர்கள் மேலே இருக்கும் பிளான்களில் உங்களுக்கு உகந்த ரீச்சார்ஜ் பிளானைகளை தேர்வு செய்து கொள்ளுங்கள்.