இந்தியாவின் முதல் நிஃப்டி EV & New Age Automotive indexயை துவங்கிய தேசிய பங்குச் சந்தை

பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, மாருதி என சுமார் 34 பங்குகளை உள்ளடக்கிய மின்சார வாகனம் மற்றும் அதன் சார்ந்த நிறுவனங்களுக்கான Nifty EV & New Age Automotive index என்ற பெயரில் தனி குறீயிடு தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) நிறுவனம் துவங்கியுள்ளது.

நிஃப்டி 50, பேங்க் நிஃப்டி போன்ற இன்டெக்ஸ் போல ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிஃப்டி ஆட்டோ உள்ள நிலையில் பிரத்தியேகமாக மின்சார வாகனங்கள் மற்றும் அதன் சார்ந்த பேட்டரி, உதிரிபாகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை உள்ளடக்கியதாக நிஃப்டி இவி & நியூ ஏஜ் ஆட்டோமோட்டிவ் இன்டெக்ஸ் துவங்கப்பட்டுள்ளது.

எதிர்காலம் மின்சார வாகனங்கள் என்ற நிலையை நோக்கி நகரும்  நிலையில் இந்த முன்னெடுப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை மிக எளிமையாக மின்சார ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வளர்ச்சியை இண்டெக்ஸ் மூலம் அறியலாம்.

Nifty EV & New Age Automotive indexல் அதிகபட்ச மதிப்பை பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதனை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது. நிறுவனங்களின் பட்டியல் பின் வருமாறு ;-

  • அமர ராஜா எனர்ஜி & மொபிலிட்டி லிமிடெட்.
  • அசோக் லேலண்ட் லிமிடெட்
  • பஜாஜ் ஆட்டோ லிமிடெட்
  • பாரத் ஃபோர்ஜ் லிமிடெட்
  • Bosch Ltd.
  • CG பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்.
  • ஐஷர் மோட்டார்ஸ் லிமிடெட்
  • எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்.
  • குஜராத் ஃப்ளோரோகெமிக்கல்ஸ் லிமிடெட்
  • ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட்.
  • ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் லிமிடெட்
  • ஜேபிஎம் ஆட்டோ லிமிடெட்
  • ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட்
  • KPIT டெக்னாலஜிஸ் லிமிடெட்.
  • L&T டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட்.
  • மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்
  • மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்
  • மிண்டா கார்ப்பரேஷன் லிமிடெட்
  • மதர்சன் சுமி வயரிங் இந்தியா லிமிடெட்.
  • Olectra Greentech Ltd.
  • ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ் லிமிடெட்.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
  • சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்.
  • ஷேஃப்லர் இந்தியா லிமிடெட்.
  • சோனா BLW ப்ரிசிஷன் ஃபோர்கிங்ஸ் லிமிடெட்.
  • டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட்.
  • டாடா கெமிக்கல்ஸ் லிமிடெட்
  • Tata Elxsi லிமிடெட்
  • டாடா மோட்டார்ஸ் லிமிடெட்
  • டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட்
  • டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட்.
  • UNO Minda Ltd.
  • வர்ரோக் இன்ஜினியரிங் லிமிடெட்

அதிக மதிப்புள்ள பங்குகளிள் படத்தில் உள்ள அட்டவனையில் உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.